ஏறாவூர் அல்ஹாஜ் எம்.எம்.சாலி பவுண்டேசன் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையும் சிரமதான நிகழ்வும் கடந்த (19) ஞாயிற்றுக்கிழமை பவுண்டேசன் தலைவர் எம்.எஸ்.நளீம் தலைமையில் நடைபெற்றது.
ஏறாவூர்- 06, ஏறாவூர் - 6டீ கிராமசேவகர் பிரிவுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இச்செயற்பாட்டின்போது பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர், சுகாதார திணைக்களம், ஏறாவூர் நகர சபை ஏறாவூர் பிரதேச செயலகம் பொலிஸ் நிலைய அதிகாரிகளும், மற்றும் பொது அமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு வீடுவீடாக சென்று சுத்தம் செய்தல்,மக்களுக்கு விளிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டனர்.
இந்நடவடிக்கையின்போது டெங்கு நுளம்புகள் உருவாக்கத்திற்கு ஏதுவாக இருந்த வீட்டு, காணி உரிமையாளர்கள் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டதுடன். அவற்றை உடன் துப்பரவு செய்யவும் பணிக்கப்பட்டனர்.