ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்ற முன்னாள் நிந்தவூர்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீமைப் பாராட்டி,கௌரவிக்கும் நிகழ்வு நேற்று நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாலயத்தில் இடம் பெற்றது.
பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.பி.ஜிஹானா தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நிந்தவூர் கோட்டக் கல்விக் காரியாயல உத்தியோகத்தர்கள்;, ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஆங்கிலக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலீல், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.நஜிமுன்நிசா இப்றாகீம், ஓய்வுபெற்ற கோட்டக் கல்வி அதிகாரி சலீமின் பாரியார் திருமதி.மெரீனா சலீம், மகள் செல்வி.எஸ்.எப்.முஸ்பிறா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் சலீமுக்குப் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் என்பன வழங்கி, கௌரவிக்கப்பட்டதோடு, பகல்வேளை அறுசுவை விருந்துபசாரமும் இடம் பெற்றது.
இங்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜலீல் கருத்துத் தெரிவிக்கையில்:- 'எமது வலயத்திலுள்ள கோட்டக் கல்விப் பணிப்பாளர்களுள் மிகச் சிறப்பாக சேவையாற்றியவர்தான் சலீம் அவர்கள். பொறுப்பெடுத்த காரியத்தை உடன் நிறைவேற்றுவதில் அவர் குறியாய் இருந்து செயற்பட்டவர். அவரது சேவையை நாம் பாராட்ட வேண்டும். 'ஒரு அதிகாரி காரியாலயத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டுமானால், வீட்டில் நல்ல பெயர் எடுக்க முடியாது! வீட்டில் நல்ல பெயர் எடுத்தால், காரியாலயத்தில் நல்ல பெயர் எடுக்க முடியாது. ஆனால், சலீம் அவர்கள் வீட்டிலும், காரியாலயத்திலும் நல்ல பெயருடன் இருக்கிறார்.
எனவே. இதற்கெல்லாம் அவரது மனைவியின் தியாகமும், விட்டுக் கொடுப்புமே காரணம் என நினைக்கின்றேன்.'''''''' ஆகவே, இப்பாராட்டுக்களிலும், பெருமைகளிலும் சம பங்குடையவராக சலீமின் மனைவி திகழ்கின்றார்' எனத் தெரிவித்தார்.