நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன் -
குடாகம முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒற்யைடி பாதை ஒன்றைச் செப்பனிடுவதற்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் நிதியொதுக்கீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.
இந்தக் கிராமத்தின் இளைஞரொருவரின் வேண்டுகோளை ஏற்று 25.032017 அந்தக் கிராமத்துக்குச் சென்ற மாகாணசபை உறுப்பினர் முறையான பாதை ஒன்றில்லாத காரணத்தினால் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நேரிடையாக அறிந்து கொண்டார்.
இதன் போது தேர்தல் காலங்களில் எமது கிராமத்துக்கு வருகின்ற வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகள்
வழங்கி வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றதன் பின்பு தம்மை மறந்து விடுவதாகவும் அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துச் செல்கின்ற பணிகளை அறிந்தே மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீதரனுடன் தொடர்பு கொண்டதாக குறிப்பிட்ட இளைஞர் கருத்துத் தெரிவித்தார்.