ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் நல்லாட்சிக்கு எதிரானது-ஞானமுத்து ஸ்ரீநேசன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

ட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவு கும்புறுமூலை பகுதியில் வைத்து, செய்தி சேகரிக்கச் சென்ற சுதந்திர ஊடகவியலாளர்கள் மீது கடந்த 21.03.2017ஆம் திகதியன்று தாக்கப்பட்டு அச்சுறுத்திய சம்பவம் நல்லாட்சிக்கு எதிரானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இது விடயமாக தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

மக்களின் விருப்பத்திற்கு மாறாக மதுசார உற்பத்தி நிலையம் ஒன்று கல்குடா - கும்புறுமூலையில் ஆரம்பிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவது கவலையளிக்கிறது.

இந்த விடயத்தை அறிந்து மேற்படி ஊடகவியலாளர்கள் தகவல்களை சேகரிக்கச் சென்றுள்ளார்கள். அந்த வேளையில் அவர்கள் அடிதடிகாரர்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.

இத் தாக்குதலானது நல்லாட்சி என்ற சொல்லுக்கு எதிரான தாக்குதலாகவே நான் பார்க்கின்றேன்.

மேலும் 'போதையற்ற நாட்டை உருவாக்கப் போகின்றேன்' என திடசங்கற்பம் பூண்ட ஜனாதிபதியின் கருத்துக்கு எதிரான தாக்குதலாகவும் இது அமைந்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் அரசாங்கம் நிறைவேற்றியுள்ள தகவலறியும் உரிமைச் சட்டம், ஊடக சுதந்திரம் பற்றிக் கேள்வி எழுப்புகின்றது.

இப்படியான செயற்பாடுகள் கடந்த காட்டாட்சி முறையில் தான் அதிகமாக நடைபெற்றன. இப்படியான நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பாகும்.

தாக்கியவர்கள் கைது செய்யப்பட்டமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டமை போன்ற செயற்பாடுகள் வரவேற்கத் தக்கவையாகும்;.

ஆனால், இப்படியான அடிதடிகாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது. மக்களை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் மதுச்சாலைகள் சிறுபான்மையினர் வாழும் பிரதேசங்களில் திட்டமிட்டு அதிகமாக திறக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -