கடந்த ஆண்டு மொஹிந்தர் சிங் கில் (வயது 79), - தல்ஜிந்தர் கவுர் (வயது 72) என்ற வயதான தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது பிரார்த்தனையை கடவுள் நிறைவேற்றிவிட்டார், என்றும் தற்போது தான் தனது வாழ்க்கை முழுமையாகியது என்றும் தல்ஜிந்தர் கவுர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாத வயதுடைய அவர்களது மகன், தற்போது தான் ஊர்ந்து செல்கிறான், ஏனென்றால் வயதான தாய், தன் மகனுக்கு பிறந்த 3 மாதங்களில் தாய்பாலை நிறுத்திவிட்டார்.
நான் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன், மேலும் இப்பொழுதெல்லாம் நான் மிகவும் எளிதாக சோர்வடைந்து விடுகிறேன். இதன் காரணமாக நான் பல மருத்துவர்களை சந்தித்துள்ளேன், ஆனால் அவர்கள் வெறும் மருந்து மாத்திரைகளும், உணவு முறை திட்டங்களையும் தான் கொடுக்கிறார்கள் என்று தல்ஜிந்தர் கவுர் கூறியுள்ளார்.
மேலும் அவர், நான் என் மகன் அர்மானை நினைத்து தான் கவலைப்படுகிறேன். நான் உடலை பார்த்துக்கொண்டால் தான், அர்மானை நல்லபடியாக பார்த்துக்கொள்ள முடியும். அவன் இன்னும் என் மடியிலும், கையிலும் ஊர்ந்து செல்கிறான். அது மிகவும் கடினமாக உள்ளது. என் உடல் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் நினைத்ததை விட கடினமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஹிசாரில் தேசிய கருத்தரிப்பு மையம் நடத்திவரும் டாக்டர் அனுராக் பிஷ்னாயின் (43), இந்த தம்பதிகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.
பிறக்கும் போது இருந்த 3lbs எடையில் இருந்த அர்மான் சிங், தற்போது வெறும் 15lbs எடையில் தான் இருக்கிறார். இவருக்கு அடுத்த மாதத்துடன் 1 வயது பூர்த்தியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் எடைக்குறைவாக இருக்கும் அர்மான், மிக சிறயதாகவே இருப்பதால், டயபர் கூட வைக்க முடியவில்லை என்று தல்ஜிந்தர் கவுர் கூறியுள்ளார். நான் 3 மாதத்தில் தாய்பாலை நிறுத்தியதால் தான் இந்நிலமை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், நான் மருத்துவரை அணுகி மருந்துகள் மூலம் உடல் உடையை அதிகப்படுத்தலாமா என்று கேட்டேன். அதற்கு மருத்துவர்கள், இயற்கையாகத்தான் உடல் எடை கூட வேண்டும் என்று கூறிவிட்டார். எனக்கும், என் கனவருக்கும் வயது காரணமாக அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போகிறது. ஆனால் எங்கள் மகனை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஏக்கமும் எங்களிடம் உள்ளது.