எஸ்.எம்.சன்சீர்-
கலாசார அலுவலகள் தினைகளமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இனைந்து நடாத்தும் கலை கலாசார மன்றங்களை பதிவு செய்வதற்கான விஷேட நடமாடும் சேவை கடந்த (07,08) ஆகிய இரு தினங்களில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் டி.எம்.றின்ஸான் தலைமையில் அக்கரைப்பற்று மத்திய கலாசார நிலையத்தில் நடைபெற்றது. இன் நிகளழ்வில் எஸ்.தநுசன் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகத்திநுடைய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகா அவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை பதிவு செய்வதற்காக கல்முனை பிரதேச செயலகத்திலும், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், ஆலயடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் உள்ள கலைமன்றங்களை பதிவு செய்வதற்கான நடமாடும் சேவை அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்திலும் நடைபெற்றது.
இந்த நடமாடும் சேவையின் போது 73 கலைமன்றங்களை தற்காலியமாக பதிவு செய்து பதிவு இலக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் இறக்காமம் அய்மன் கலை கலாசார மன்றத்துக்கான பதிவீட்டினை அம்மன்றத்தின் தலைவரிடம் கையளிப்பதனையும் படங்களில் கானலாம்.