எஸ்.ஹமீத்-
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தைச் சேர்ந்த, உலகிலேயே அதி கூடிய நிறை கொண்ட குண்டுப் பெண்ணான இமான் அஹமத் என்ற பெண்மணி உடல் நிறையைக் குறைக்கும் பொருட்டு இந்தியாவின் மும்பை நகருக்குக் கொண்டு வரப்பட்டதும், இதற்காகத் தயாரிக்கப்பட்ட விஷேட கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் விமானத்திலிருந்து கிறேன் மூலம் இறக்கப்பட்டு, பாரிய லொறியொன்றின் மூலம் மும்பாய் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டமையும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை இமானுக்கான முதலாவது கட்ட சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக மும்பாய் சைபீ ஆஸ்பத்திரி (Saifee Hospital) வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதன்போது அவரது நிறை நூறு கிலோ கிராமினால் குறைந்திருப்பதாகவும் தொடர்ந்தும் நிறை குறைப்புக்கான சத்திர சிகிச்சைகள் இடம்பெறுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் முபாஸ்ஸல் லெக்டவாளா (Dr Muffazal Lakdawala) அவர்கள் சத்திர சிகிச்சை செய்யும் குழுவுக்குத் தலைமை தாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.