எம்.ரீ.ஹைதர் அலி-
கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட மட்-மம-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 2002ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய பழைய மாணவர்களின் முதலாவது ஒன்றுகூடல் ஒன்று 2017.03.21ஆந்திகதி-செவ்வாய்க்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.
இவ்ஒன்றுகூடலானது மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் 11 வருட காலத்தின் பிற்பாடு ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவினை மையப்படுத்தியே இவ்ஒன்றுகூடல் இடம்பெற்றதோடு, இவ்வாறானதொரு சந்திப்பு ஒன்றினை மேற்கொள்வதற்கு எங்களுக்கு வழி அமைத்து தந்தது இப்பாடசாலையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழாவே காரணம் என அனைவரும் தெரிவித்துக்கொண்டதோடு, இச்சந்தர்ப்பத்தில் நம்முடன் கல்வி கற்று தற்பொழுது வெளிநாட்டிலுள்ள நண்பர்களையும் ஞாபகப்படுத்திக்கொண்டனர்.
மேலும், இச்சந்திப்பின்போது தங்களது பாடசாலையில் கல்வி கற்ற அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டதோடு, நாங்களும் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் என்ற நோக்கத்துடன் இன்ஷாஅல்லாஹ் இப்பாடசாலைக்கு தங்களால் இயன்ற உதவிகளை எதிர்காலத்தில் வழங்குவதென்றும், இக்கூட்டத்திற்கு வருகை தராத எம்முடன் கல்வி கற்ற ஏனைய நண்பர்களையும் நேரில் சந்தித்து எமது பாடசாலையில் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழா தொடர்பாக தெரியப்படுத்துவது என்றும், இப்பரிசளிப்பு விழாவுடன் எமது ஒன்றுகூடல் நின்று விடாது இன்றிலிருந்து தொடராக இச்சந்திப்புக்கள் இடம் பெற வேண்டுமென்றும் தீர்மானித்துக்கொண்டனர்.