அய்ஷத்-
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் (19.03.2017) இடம்பெற்ற 2017 ஆம் ஆண்டிற்கான அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான எல்லே போட்டியில் பாலமுனை ட்றை ஸ்டார் விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியின் அரையிறுதி போட்டிகளுக்கு பாலமுனையைச் சேர்ந்த ட்றை ஸ்டார், மெறோன்ஸ், ஹூசைனியா,ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டு கழகங்கள் தெரிவானதுடன், இறுதிப் போட்டியில் பாலமுனை ட்றை ஸ்டார் விளையாட்டுக் கழகமும், ஒலுவில் இலவன் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் பலப்பரீட்சை நடத்தின இதில் பாலமுனை ட்றை ஸ்டார் விளையாட்டுக் கழகமானது 6:2 என்ற ஓட்ட அடிப்படையில் வெற்றி பெற்று 2017ம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
ட்றை ஸ்டார் அணியானது தொடர்ச்சியாக 04 தடவைகள் உட்பட 15 ஆவது தடவையாக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல தடவைகள் மாவட்ட மட்ட சம்பியனாகவும் மாகாணமட்ட சம்பியனாகவும் தெரிவு செய்யப்பட்ட இவ் அணியினர் 05 தடவைகள் தேசிய மட்டத்தில் பங்குபற்றியுள்ளதோடு 2008 ஆம் ஆண்டில் இளைஞர் விளையாட்டு விழாவில் அகில இலங்கை மட்டத்தில்(தேசிய) 03வது அணியாக தெரிவு செய்யப்பட்டு வெண்கலப் பதக்கத்தைப் பெற்று முழு கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்த அணியாக திகழ்கிறது.
இன்ஷா அல்லாஹ் இம்முறை தேசிய மட்டத்தில் வெற்றியீட்டி சாதனைகள் பல படைக்க இறைவனை பிரார்த்திக்கின்றோம்.. பல வருடங்களாக தொடதேர்ச்சியாக வெற்றியீட்டி வரும் ட்றை ஸ்டார் அணி வீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள்..