கிழக்கு டெங்கு ஒழிப்புக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கைகு இணங்க டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 45 மில்லியன் ரூபா நிதியை வழங்க உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பணிப்புரை விடுத்துள்ளார். இதனடிப்படையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா 10 இலட்ச ரூபா வீதம் வழங்குவதற்கு அமைச்சரின்செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா ,கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது,

இந்தக் கூட்டத்தில் பிரதிமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் உள்ளிட்டவர்களுடன் இராணுவ உயர் அதிகாரிகள் மாகாண செயலாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்,

இதன்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதன் போது தெளிவு படுத்தினார். உள்ளூராட்சி மன்றங்களில் நிலவும் ஆளணிப்பற்றாக்குறை மற்றும் வாகனங்கள் மற்றும் உபகரணப் பற்றாக்குறை தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சர் உள்ளூராட்சி மன்ற அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனடிப்படையில் முதலமைச்சரின் கோரிக்கையை கருத்திற் கொண்ட உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் கிழக்கின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு 450 இலட்ச ரூபாவை உடன் வழங்குமாறு அமைச்சின்செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். இதன் மூலம் மாகாணத்தின் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை தீவிரப்படுத்த இந்த நிதி பாரிய உதவியாக அமையும் எனவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் தமது கோரிக்கை்கு செவி சாய்த்து 45 மில்லியள் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தமைக்கு உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் நன்றிகளையும் தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -