தலைவர் தவிசாளர் மோதலும் நசுங்கிப்போகும் முஸ்லிம் சமூகமும் - ஜுனைட் நளீமி

முஸ்லிம் அரசியலில் சூடுபிடித்துள்ள செய்திதான் சிரிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடசிக்குள் எழுந்துள்ள உற்கட்சி முரண்பாடுகள். 'அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த' என்ற தோரணையில் குதர்க்க அரசியல் செய்யும் சில்லறை கடசிகள், தேசிய பெரும்பான்மைக்கடசிகள், சர்வதேச ஸோரோக்கள் என பல நிகழ்ச்சி நிரல்களுக்குள்;;;;;: முஸ்லிம் சமூகம் சீடி பார்ப்பதற்காக சமூக வலைத்தளங்களில் வாந்தியெடுத்துக்கொண்டு விழிபிதுங்கி நிற்கின்ற அருவருப்பான சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. 

இலங்கை அரசியல் யாப்பு மாற்றங்கள், இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகள் என முன்னெடுப்புக்கள் செய்யப்படுகின்ற இகÊகாலபÊபகுதியிலÊ; முஸ்லிம் அரசியல் இஸ்திரத்தன்மை மீதான கல்லெறிதல்கள் ஒன்றும் புதிய விடயமல்ல. அரசு புலிகள் பேச்சுவார்த்தை காலப்பகுதியில் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்ற சிரிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அடையாளத்தை கருவறுக்க உட்கடÊசி முரண்பாடுகளை தோற்றுவிப்பதில் அன்றைய அரசும், அயல் நாடுகளும் கடÊசி;தமாக காய்களை நகரÊத்தின. இதனால் பேச்சுவார்த்தை மேசையில் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக முஸ்லிம் காங்கிரசை மாத்திரம் ஏற்க முடியாது ஏனைய சில்லரைக்கடÊசிகளுடன் பேசித்தீரÊÊவொன்றினை கண்டபின்னர் நாம் ஈழத்தில் வைத்து நமக்குள் பேசிக்கொள்வோம் என அன்றைய புலிகளின் அரசியல் ஆலோசகர் முஸ்லிம் காங்கிரஸை மூன்றாம் தரப்பாக ஏற்றுக்கொள்ள மறுத்தமை வரலாற்று சான்றாகும். அரசதரப்பாகவாவது கலந்துகொண்டு சர்வதேச சமூகத்துக்கு ஏதாவது சொல்லிவிடலாம் என்ற நிலையில்; கட்சி பறிபோய்விடும் நிலையில் பேச்சுவார்த்தையாவது, முஸ்லிம்களுக்கான தீர்வாவது என்ற தோரணையில் பேச்சுவார்த்தை மேசையை விட்டு இரவோடிரவாக இலஙÊகை வந்தமையும் எஞ்சி நின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் குளிரின் கொடுமையில் அறைகளில் இருக்க போர்த்திக்கொண்டு தூங்கியமையும் கறைபடிந்த நாட்கள். அன்று இனப்பிரச்சினை தொடர்பில் தீர்வொன்று எட்டப்பட்டிருப்பின் முஸ்லிம்களது எதிர்காலம் கேள்விக்குறியானதாக அமைந்திருக்க வாய்ப்பாக அமைந்திருக்கும்.

தவிசாளரது வாதங்களும் நியாயங்களும்

தேசியப்பட்டியல் விவகாரம் சூடு பிடித்த பின்னரான ஓரம்கட்டல் அதிரடி நடவடிக்கை வெளிக்கலப்போராக கட்சியின் தேசிய மாநாட்டில் மேடையேறியபோது தவிசாளர் தம்மை சுதாரித்துக்கொண்டு தலைமையோடு சமர் செய்ய முற்ப்பட்டமை ஒன்றும் தெரியாததல்ல. ஆனால் 'சுத்தப்படுத்துதல்' நடவடிக்கை என்ற விடயங்களில் சில நியாயப்பாடுகள் இருந்தாலும் காலம் பொருத்தமானதாக சமூக நிலைமையில் அமையவில்லை. தலைவர் அஷ்ரபின் மறைவிற்குப்பின்னர் கட்சியை கைப்பற்றி, காப்பாற்றிக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும், கிழக்கு மாகாண சபையினை கைப்பற்றிக்கொள்ள பாராளுமன்ற பதவியை தூக்கியெறிந்துவிட்டு மாகாண சபை வேற்பாளராக களமிறங்கியமையும், தனது அமைச்சுப்பதவியை தூக்கியெறிந்துவிட்டு கட்சியோடு அரசை விட்டு வெளியேறிமையும் என பல கட்சி விசுவாச நடவடிக்கைகளை தவிசாளர் காண்பித்தபோதும் அவை தலைவரைப்பொறுத்தவரை தவிசாளருக்கும் தலைவருக்குமான தேன் நிலவு காலமாகவும் சில போது தலைவருக்கு நெருக்குவார காலமாகவும் அமைந்தன.

 தவிசாளரது தற்போதைய கதையாடல்கள் பதினெட்டாவது திருத்த மூலத்திற்கு ஆதரவளித்தபோது அல்லது சிறுபான்மைக்கான எஞ்சியிருந்த குறைந்த பட்ச அதிகார எல்லையான உள்ளுராட்ச்சி சட்டமூலங்களை மேவிய திவிநெகும சட்டமூலத்தை ஆதரித்தபோது, அழுத்தகமை பற்றி எரிந்தபோது, தம்புள்ளை பள்ளிவாசல் இழுபறியானபோது, கூரைகளை விவகாரம் பக்க சார்பானபோது, அரிசிமலை முஸ்லிம்கள் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டபோது, கரிமலையூற்று பள்ளிவாசல் உள்ளிட்ட முஸ்லீம் பூர்விக காணிகள் அபகரிக்கப்பட்டபோது, பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு முஸ்லீம் சமூகம் ஓரளவு நிம்மதி பெருமூச்சு விடலாம் என நினைத்த மறுகணமே காரணமின்றி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதியை ஆதரிக்க வேண்டி ஆலோசிக்க அமெரிக்க தூதரகத்துக்கு சாணக்கியத்தை இழுத்துச்செல்லாமல் இருந்துவிட்டு என்று என பல்வேறு முஸ்லீம் இருப்புக்கெதிரான நடவடிக்கைகளின் போது முன்வைக்கப்பட்டிருந்தால் நியாயமானதாக கொள்ள முடியும். மாறாக கடந்த கால அரசியல் நாடகத்தில் இவ்விரண்டு கதாபாத்திரங்களும் கச்சிதமாக பாத்திரமÊ ஏற்றபின்னர் தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எத்தகைய வாக்குமூலமாக கொள்ள முடியும் என்ற கேள்வியும் எழாமலும் இல்லை. 

தலைமையின் மீதான எதிர்வினைகள்

தவிசாளர் தரப்பு நியாயங்கள் அல்லது வாதங்கள் ஒருபுறம் இருக்கும்போது தலைமை மீதான புடம்போடல் காலம் கடந்த ஒன்றாகவே அமைந்துள்ளது. தேசியப்பட்டியலÊ வழஙÊகளிலÊ ஆரம்பித்த தலைமை மீதான குற்றப்பார்வைகள், சமூக நலன் தொடர்பான விடயங்களில் காத்திரமான முடிவுகளை உடனே எடுத்து சமூகத்தை வழிநடாத்தாமல் சமூகம் முடிவுகளை எட்டிய பின்னர் அதன்மீது உரிமை கொண்டாட முற்படÊட கையாளாக நிலைகளின் போது, கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்று கிழக்கை மறந்து மீண்டுமொரு தேர்தல் வரும்பொழுது மாத்திரம் தவளம வியாபாரிகளாக வருகை தந்தபோது, என பல குற்றச்சாட்டுக்கள் நியாயமானதாகவே அமைகின்றது.

 வடகிழக்கில் முஸ்லிம்களது காணிப்பிரச்சினைகள், வளப்பகிர்வு, பிரதேச செயலக, பிரதேச சபைகளின் எல்லை மீளÊநிர்ணயம், உருவாக்கம் என முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கிடப்பிலே கிடக்க ஏனைய முஸ்லீம் சில்லறைக்கட்சிகள் போன்று பதவிகளையும் சலுகைகளையும் குறிக்கோளாக கொண்டு ஊடக அறிக்கை தமிழில் விட்டுவிட்டு வர்ணப்படங்களை பிரசுரிப்பதால் மற்றும் முஸ்லீம் சமூகம் அங்கீகாரம் வழங்கியதாக கருதிவிட முடியாது. 

கட்சிக்கு எதிராக செயற்பட்டவர்கள், கட்சிப்போராளிகளை கருவறுக்க செயற்பட்டவர்கள், எல்லோரும் நிபந்தனையின்றி உள்ளே வரவும் வெளியேறவும் கதவுகளை நிபந்தனையின்றி திறந்துவிட்டிருந்தமை என்பன மீதான எதிர்வினைகளும் யதார்த்தமாகவே எழுந்துள்ளன. கட்சியில் கலையெடுத்தல் என்ற அம்சம் காலம்பிந்தியதாக அமைந்தாலும் பதில் சொல்ல வேண்டிய பல்வேறு விடயங்கள் கிடப்பிலேயே கிடக்கின்றன. களையெடுக்க ஆரம்பித்த காலம்தொட்டு கிளைவிட்டெழுந்துள்ள கிழக்கு வாதம் குறித்த சரியான புரிதல்களையும் கட்சி மக்கள் மன்றத்தில் சரியாக முன்வைக்கவில்லை என்ற வாதமும் மறுப்பதற்கில்லை. 

கிழக்கின் எழுச்சியும் கட்சியின் நிலைப்பாடும் 

கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான தலைமையின் களமிறங்களுக்கு எதிர்கொள்ள ஒட்டுமொத்த முஸ்லீம் காங்கிரசின் பெயரால் அனுபவித்த கட்;சியை காட்டிக்கொடுத்த, மக்களால் புறக்கணிக்கப்பட்ட அனைத்து தரப்பும் எதிர் அரசியல் செய்யும் கட்சிகளுடன் கைகோர்த்துக்கொண்டன. கடந்த தேர்தலில் தலைமையினால் ஓரம்கட்டப்பட்ட கலைகள் என கருத்தப்பட்டவர்களுடன், முகவரியற்ற சிறுகட்சி தலைவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் கட்சி முக்கியஸ்த்தர்கள், சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்தபோது முகவரியற்றிருந்த ஆரம்ப போராளிகள் என சிலருடன் தேசியல்பட்டியல் கனவுகளுடன் சிலர், முஸ்லீம் சமூக அரசியல் அபிலாசைகளை கிள்ளியெறிய முற்படும் ஆதிக்கவாத இனக்கடÊசிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கித்துப்போனதின் விளைவே கிழக்கின் எழுச்சி என கொள்ள முடியும். காங்கிரஸ் தலைமையின் சறுக்கல்களும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுத்தமையை மறுக்க முடியாது. 

கட்சியில் கலையெடுப்புக்களை ஆரம்பிப்பதற்கான போராட்டத்தினை கட்சி தலைமை காலம்பிந்தியே முன்னெடுத்துள்ளதாக தோணுகின்றது. என்கிறபோது கலையெடுப்புக்கு முன்னதான தலைமைக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கும் அல்லது மக்களுக்கும் இடையிலான உறவு பெரும் இடைவெளியாகவே காணப்பட்டது. குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு கட்சி இடம்விட்டு சென்றதனால் கட்சியை மையப்படுத்தியதாக அன்றி தனிநபர்களை மையப்படுத்தியதாகவே கட்சி அரசியல் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் தலைவர் என்பவர் வெறுமனே கொழும்பினை மையம் கொண்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் போன்றே கருதப்பட்டார். பிராந்திய நிகழ்வுகளுக்கு தலைவர் பங்குபற்றுதல் என்பது தேவையற்ற ஒன்றாகவே காணப்பட்டது. மக்களுக்கும் தலைமைக்கும் இடையிலான இடைவெளிகள் கூடியது மாத்திரமன்றி தேர்தல்கள் வரும்போது மாத்திரமே கிடைக்கப்பெறும் கருப்பு பணங்களை தேர்தல் செலவுகளுக்காக பெற்றுக்கொள்ள தலைவர் படங்களை போஸ்ட்டர்களில் இட்டுக்கொள்ளும் நிலை காணப்பட்டது. இந்நிலையில் தலைமையின் நியாயங்களை முனÊவைகÊகவோ அல்லது மக்களின் எதிர்வினைகளை எதிர்கொள்ளவோ தலைமை களம் அமைக்கவில்லை என்ற நிலைமை காணப்பட்டது.

இவ்விடைவெளியை சாதகமாக பயன்படுத்தி பிரதேசவாதம் என்ற யுக்தி ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது. இலங்கை முஸ்லிம் அரசியலில் பிரதேசவாதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே காணப்படுகின்றது. கட்சி ஒன்றானபோதும் ஊர்களும், தொகுதிகளும் எல்லைபோட்டு அரசியல் செய்வதொன்றும் மறுக்கமுடியாத யதார்த்தங்கள். குறிப்பாக கடÊசியின் செயலாளர் நாயகத்திற்கு தலைவர் அஷ்ரப் காலத்து கட்சியின் தவிசாளராக இருந்த வேதாந்திக்கும் உள்ள சம்பந்தம் கலந்த குடும்ப உறவு தேசியப்பட்டியல் விடயத்தில் மேலும் வலுவடைந்ததன் விளைவே கிழக்கின் எழுச்சியாகும். செயலாளர் நாயகத்தின் பக்கம் பல நியாயங்களும் போராளிகள் மட்டத்தில் அனுதாபமும் கிழக்கின் எழுச்சி நாயகர்களுக்கு சாதகமாக அமைந்தன. 

சுமூக தீர்வே புத்தி சாதுர்யமானது

கட்சித்தலைமையினைப்பொறுத்தவரை அதிகார மையங்களை பகிர்தல் தொடர்பில் மீளாய்வு செய்யப்படவேண்டும்.

தற்போது இடம்பெற்று வருகின்ற உட்கட்சி போரினை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது காலத்தேவையாகும். தலைவர் வெல்வாரா தவிசாளர் வெல்வாரா என்ற எதிர்பார்ப்புக்களுகÊகு அப்பால் சமூகம் வெல்வதைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. 

புத்திஜீவிகள் பார்வையில் கட்சிப்பாத்திரத்தில் கையிட்டவர்களின் பெரும்பான்மையானவர்கள் கைகள் அழுக்கடைந்தே காணப்படுகின்றது. புத்தகங்களும் சீடிக்களுமÊ தீர்வினை கொண்டுவரப்போவதில்லை. அரசியலில் தலைவர் அஷ்ரப் குறிப்பிட்டது போன்று செவிடனாக குருடனாக ஊமையாக சிலபோது இருந்தாகவேண்டும் என்பதற்கு அப்பால் வெட்கம், மானம் , சூடு, சொரணை அறÊற என்ற நாட்டுப்புற வார்த்தைப்பாவனைகளை பண்பாக அரசியல் வாதிகள் கொண்டுள்ளதால் இத்தகைய ஆவணப்படங்கள் ஒன்றும் சாதித்துவிடப்போவதில்லை. கட்சியானது குரான், ஹதீஸை பின்பற்றுகின்ற முழுவதுமான ஷரியா கட்சியுமல்ல.

கட்சிப்பொறுப்புக்களை சுமந்துள்ளவர்கள் பாவங்களை விட்டும் தூய்மை பெற்றவர்களும் அல்ல. அவர்களும் சாதாரண மனிதர்களே என்ற நோக்கில் இதனை அணுக வேண்டும். கூட்டுப்பொறுப்புக்கள், வகை கூறுதல் என்ற குறைந்த பட்ச ஜனநாயக பண்புகளையாவது கட்சி கொண்டிருக்கும் இத்தகைய இழி நிலை ஏற்பட்ட வாய்ப்பாக அமைந்திருக்காது.

 தலைவருக்கு நீட்டும் கைகளில் விரல்கள் சில மற்றவர்களையும் நோக்கி நிற்பதனை மறந்துவிடவும் முடியாது. கட்சிப்பத்திரிகை அச்சிடும்போதும், கிழக்கிலிருந்து தலைநகருக்கு சின்னதாய் வீட்டு வசதிகள் செய்து கொடுத்தபோதும், வெளிநாடுகளில் தஞ்சம் கோர உதவியபோதும் என பல ஆவணப்படங்கள் மற்றவர்களையும் சுமந்துநிற்கின்றது என்கின்ற உண்மையை விறல் நீட்டுபவர்கள் மறந்துவிடக்கூடாது என காலம் சொல்வது ஒன்றும் புதிதல்ல. தனிமனித விடயங்கள் சந்திக்கு வருவதொன்றும் பெரியவிடயம் இல்லாவிட்டாலும் கட்சியின் இருப்பைப்பொறுத்தவரையில் மிக அவதானமாக கையாளப்படவேண்டிய ஒன்றாகும். 

தற்போதைய இலங்கை அரசியல் சூழ்நிலையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அல்லது தேசிய ஷ_ரா சபை போன்ற நிறுவனங்கள் முக்கிய வகிபாகத்தினை மேற்கொள்ள வேண்டும். 

கூட்டு தலைமைத்துவம் ஓரளவு சிந்திக்கப்படவேண்டிய ஒன்று.

கிழக்கிற்கான கோஷம் வெறுமனே ஒரு பிரதேச வாதத்தினை தோற்றுவிப்பதாகவே முஸ்லீம் தேசிய அரசியலில் நோக்க வேண்டிய விடயமாகும். ஆரம்பத்தில் அம்பாறைக்கு தலைமை என்ற வாதமும், கரையோர மாவட்டம் என்ற கோஷமும் தோற்றுப்போன நிலையில் கிழக்கின் எழுச்சி தொடர்பான சில நியாயப்பாடுகளும் ஜீரணிக்க முடியாத ஒன்றாகவே அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் கொள்ளப்படுகின்றது. சிலபோது இக்கோஷம் சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஒரு சிறுகுழுமத்திற்கு மாத்திரமே பேசுபொருளாக அமைந்துள்ளது. ஆனால் தீர்மான சக்திகளில் பெரும்பங்கினை கொண்டிருக்க வேண்டும் என்ற நியாயப்பாடும் கருத்திற்கொள்ளப்படவேண்டியதே. அதேபோன்று வடகிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் அபிலாசைகளையும் உள்வாங்குவதற்கான தலைமைப்பொறுப்புக்கள் பகிர்ந்துகொள்ளப்படவேண்டியுள்ளது.

எனவே கட்சியின் தற்போதைய இழுபறி நிலைமையினைப்போக்க நன்கு வரைபு செய்யப்பட கூட்டுத்தலைமைத்துவ சபை ஒன்று அமைக்கப்பெறுவது பொருத்தமாக அமையுமென அரசியல் ஆய்வார்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தாருஸ்ஸலாமில் இருந்து. தாருல் ஹகிமிற்கு மாற்றப்பட்ட சூரா சபை முடிவுகளானது மீண்டும் தாருஸ்ஸலாமிலேயே மேற்கொள்வதற்கான மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அவை மக்கள் மயப்படுத்தப்பட்டதாக அமையவேண்டும். தலைமைத்துவ சபைக்கான ஆலோசனை சபையும் பொருத்தமானவர்களைக்கொண்டு அமைக்கப்படவேண்டும். தற்போதுள்ள தலைமையினை கௌரவப்படுத்தும் வகையில் தலைமைத்துவ சபை அமையப்பெறுவது பொருத்தமானதாக அமைவதுடன் சுழற்சி முறையான அல்லது பெரும்பான்மை தலைமைத்துவ அங்கத்தவர்களின் விருப்பினைப்பெற்று கட்சித்தலைமைப்பொறுப்பு வழங்கப்படுவதும் பொருத்தமாக அமையும். 

இவற்றுக்கெல்லாம் அப்பால் தேசியத்தில் அனைத்து முஸ்லீம் சிறுகட்ச்சிகளையும் ஒன்றிணைத்ததான முஸ்லீம் கூட்டமைப்பு ஒன்றும் உருவாக்கப்படுவதற்கான முயற்சிகளும் காலப்பொருத்தமாக அமையும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -