நல்லாட்சியிலும் மோசடிக்காரர்கள் அமைச்சர்களாக உள்ளனர் - சந்திரிக்கா

ற்போதைய நல்லாட்சி அரசாங்கம் மோசடிகளில் ஈடுபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னதாக நல்லாட்சி அரசாங்கத்தில் மோசடிகள் இடம் பெறுவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்தனகல பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் கடந்த அரசாங்கம் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்து வருவதாகவும், எனினும் தற்போதைய அரசாங்கத்திலும் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ள சந்திரிக்கா அவ்வாறு மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -