உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மற்றும் எலும்புக் கூட்டு எச்சங்கள் மீட்பு..!

க.கிஷாந்தன்-
லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – மிடில்டன் இடுகாட்டு பகுதியில், உருக்குழைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு அண்மித்த பகுதியில் மிடில்டன் தோட்ட இடுகாடு பகுதியில் இச்சடலத்தை 07.02.2017 அன்று காலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அப்பகுதி பிரதேச மக்கள் சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலவாக்கலை பொலிஸார் சடலத்தை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குழைந்து காணப்படுவதாகவும், அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுதவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டெடுக்கபட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -