காத்தான்குடி: மாணவன் தாக்கப்பட்டது தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானவை - அதிபர்

எம்.ஜே.எம்.சஜீத்-
சிறுநீர் கழிக்க வெளியே சென்ற மாணவனுக்கு வகுப்பாசிரியர் கொடுத்த தண்டனை எனும் தலைப்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை என காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் தரம் 3இல் கல்வி பயிலும் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து வினவிய போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மாணவன் தாக்கப்பட்ட விடயம் சம்மந்தமாக தான் விசாரணை மேற்கொண்ட போது குறித்த மாணவன் சக மாணவர் ஒருவரை தாக்கியதனாலே ஆசிரியரினால் தாக்கப்பட்டார். என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் இன்று தரிவுபடுத்தப்பட்டு சிறுநீர் கழிக்க வெளியே சென்ற மாணவனை வகுப்பாசிரியர் தாக்கினார் என்றும், இன்னும் வேறுவிதமாகவும் சமூக வலயத்தளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியான வன்னமுள்ளது. உண்மையில் ஒரு சம்பவம் இடம்பெற்றதற்காக அதனை திரிவுபடுத்துவது கவலையான விடயமாகும். இந்த மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஊடகங்களில் பலவிதமாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயமாக எந்தவொரு ஊடகவியலாளரும் என்னைத் தொடர்பு கொள்ளாமை குறித்தும் கவலையடைகின்றேன்.

குறித்த சம்பவம் தொடர்பில் அதிபர் என்ற வகையில் நானும், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் மாணவனின் பெற்றோருடன் பேசியுள்ளோம். எந்தவொரு ஆசிரியரும் வேண்டுமென்று மாணவர்களை தாக்குவதில்லை என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் எமது பாடசாலையில் நடைபெற்ற இந்தச் சம்பமானது கவலையான விடயமாகும். சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் எமது பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுபவர். அவர் மாணவர்களை தண்டிப்பதுமில்லை, அவர் இதற்கு முன்னர் எந்தவொரு மாணவரையும் தண்டித்தாக எந்த முறைப்பாடுகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

மேற்குறித்த சம்பவத்தில் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். பாடசாலைகளில் ஏதாவது சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சட்ட நடவடிக்கை எனும் நிலைமைக்கு இன்று காலம் மாறிவிட்டது. ஆசிரியர்களும் அச்சமான சூழ்நிலையிலே பாடசாலைகளுக்கு சமூகமளிப்பதனையும் அவதானிக்க முடிகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் தரம் 3இல் கல்வி பயிலும் ரி. சம்றி அகமட் எனும் மாணவன் ஆசிரியர் ஒருவரினால் கடந்த புதன்கிழமை தாக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -