ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு கணணி உபகரணம் கையளிப்பு..!

ட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கான கணணி உபகரணம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (03.02) பிற்பகல் சிறுவர் பராமரிப்பு நிலைய தலைவர் ஏ.எம்.எம்.அலியார் (சமூகசேவைகள் உத்தியோகத்தர்) தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வின்போது பாரளுமன்ற உறுப்பினர் அவர்களினால் நிலையத்திற்கான கணணி உபகரணம் முகாமையாளர் எஸ்.எம். சின்னலெப்பை அவர்களிடம் கையளிக்கப்பட்டது. அத்துடன்; கிழக்கு மாகாணத்தில் குறைபாடாக இருக்கின்ற முஸ்லிம் சிறுமிகளுக்கான தனியான பராமரிப்பு நிலையம் இல்லாத குiறியினை நிவர்த்திக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் முயற்சியில் மிக விரைவில் ஏறாவூரில் அமையப்பெறவுள்ள புதிய நிலையத்திற்கான முன்னேற்ற நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -