நலம், மகிழ்ச்சி, வெற்றிக்காக விளையாட்டில் ஜனாதிபதி..!

விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தேசிய வாரஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற நடைபவனியிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

அதற்கிணைவாக அனைத்து அரச நிறுவனங்களிலும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

'நலம், மகிழ்ச்சி, வெற்றிக்காக விளையாட்டு' என்பது இம்முறை விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேம்படுத்தல் தேசிய வாரத்தின் மகுட வாசகமாகும். இவ்வாரத்தில் இவ்விடயம் தொடர்பான கருத்தாடல்கள், வெளியீடுகள், விரிவுரைகள், பதாதைகளை காட்சிப்படுத்தல் போன்றசெயற்பாடுகள் ஊடாக மக்கள் தெளிவூட்டப்படவுள்ளனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், விளையாட்டுத்துறைஅமைச்சின் செயலாளர் டி.எம்.ஆர்.பீ.திஸாநாயக்க ஆகியோரும் ஜனாதிபதி செயலக சிரேஷ்ட அலுவலர்கள் மற்றும் பணியாட் தொகுதியினரும் இந்நிகழ்வில் பங்கேற்றார்கள்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -