வட கிழக்குக்கு வௌியே வாழும் சிறுபான்மையினரின் அரசியல் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் - கிழக்கு முதல்வர்

த்தேச தேர்தல் முறைமை சீர்த்திருத்த்தில் வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபானமையினரின் பிரதிநிதித்துவங்ளை பாதுகாப்பதற்கான ஷரத்துக்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்.

தொகுதிவாரி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமை இணைந்த்தான தேர்தல் முறைமையொன்று அறிமுகப்படுத்தப்பட்டாலும் விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் கிடைக்கப்பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய அச்ச நிலைமை சிறுபான்மையினர் மத்தியில் உள்ளதை உணரக்கூடியதாக உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

உத்தேச தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சரிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறினார்.

கலப்பு தேர்தல் முறைமையின் ஊடாக தேர்தல் நடத்தப்பட்டாலும் அங்கு தொகுதிவாரியானதேர்தல் முறைமைக்கு அமைய அதிக ஆசனங்கள் வழங்கப்படும் பட்சத்தில் பெரும்பான்மையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

எனவே ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் ஒவ்வொரு பிரஜையினதும் வாக்குரிமை முக்கியமானது என்பதுடன் அனைவரினதும் அரசியல் உரிமைக்கும் உரிய பெறுமதி அளிக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் உள்ள மக்களை திருப்திபடுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்துக்கும் நியாயமான தேர்தல் முறைமையொன்றை உருவாக்கியதாக அர்த்தம் கற்பிக்க முடியாது என்பதால் தேர்தல் முறைமைத் திருத்த்த்தில் அரசாங்கம் இந்த விடயங்ளை மிக அவதானமாக கையாள வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தேர்தல் முறைமைத் திருத்தம் என்பது ஒரு சமூகத்தின் எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்கும் விடயம் என்பதால் இதனை எந்வொரு தரப்புக்கும் சிறு பாதிப்புக் கூட ஏற்படாத வகையில் உருவாக்குவதன் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மையினரின் நல்லெண்ணத்தை வென்றெடுக்க ஏதுவாக அமையும் எனவும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்குக்கு வெ ளியே பெரும்பான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிதறி வாழும் சிறுபான்மையினரின் வாக்குகள் வீணடிக்கப்படாமல் அந்த மக்களின் வாக்குக்கு பெறுமதி அளிக்கப்பட்டு அவர்களின் அரசியல் தேவைகளையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்வதற்கான பிரதிநிதியொருவரை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அது மாத்திரமன்றி பெரும்பானமையினரின் பகுதிகளில் வசிக்கும் சிறுபானமையினரின் விகித்த்திற்கு ஏற்ப வெட்டுப்புள்ளிகள் குறைக்கப்பட்டு சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்படாத வகையிலான தேர்தல் முறைமையொன்றை உருவாக்கி சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைக்கு பாதுகாப்பளிக்க அரசாங்கம் முன்வரவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -