தமிழர்கள் தங்கள் தலைகளில் தாங்களே மண்னை அள்ளிப்போட்டுக்கொண்டனரா..?

ஹிந்த அரசாங்கம் வீழ்ந்ததினால், மேற்குலகத்தின் தமிழர்களின் மீதான கவலையும், ஆர்வமும் குறைந்துவிட்டது என்றே கூறலாம். ஆட்சிமாற்றத்துக்கு வழி ஏற்படுத்தியதன் மூலம், தமிழர்கள் தங்கள் தலைகளில் தாங்களே மண்னை அள்ளிப்போட்டுக்கொண்டார்கள் என்றே என்னத்தோன்றுகிறது.

பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த அரசாங்கம், அந்த யுத்தத்தின் மூலம் மனித உறிமையை பேனவில்லை என்று உலகநாடுகள் அவர் மீது பாரிய குற்றச்சாட்டை வைத்ததுமட்டுமல்ல, ஐ.நா.மனித உறிமை அமைப்புகள் அவருக்கும், அவருடைய அரசாங்கத்துக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு ஆர்வமும் செலுத்தி வந்தது,
அதே நேரம் மேற்குலக நாடுகள் ஒருவகையான பொருளாதார தடைகளையும் மஹீந்த அரசுக்கு எதிராக ஏற்படுத்தியும் வந்தது.

யுத்தத்தின் கோரத்தாண்டவத்தில் தங்கள் வாழ்வுகள் சீரழிந்து, மிகவும் மனம் நொந்துபோயிருந்த தமிழ் மக்களுக்கு மேற்குலகின் இந்த நடவடிக்கைகள் மிகவும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தது எனலாம்.

மேற்குலகின் நடவடிக்கைகளுக்கு மஹிந்த அரசாங்கம் முகம்கொடுத்து வந்தாலும், யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளத்தை வென்று தன்மீதுள்ள கலங்கத்தை நீக்கவிடவேண்டும் என்ற என்னத்தில், நல்லிணக்க நடவடிக்கைகளுக்காக பல நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
வடக்கின் வசந்தம் என்றும், கிழக்கின் உதயம் என்றும் கூறிக்கொண்டு பல கோடிகளை வடக்கிலும் கிழக்கிலும் செலவுசெய்துவந்தார்.

அதே நேரம் பணிரெண்டாயிரம் புலிப்போராளிகளுக்கு நிவாரணம் வழங்கி விடுதலையும் செய்திருந்தார், யுத்தத்தில் யுத்த மீரள்கள் நடந்துள்ளதா? என்று விசாரனை மேற்கொள்ளவும் குழுக்களை அமைத்திருந்தார்.
இந்த நடவடிக்கைகளில் தமிழ்மக்கள் திருப்தியடையவில்லை, யுத்தத்தின் மூலம் தங்களின் என்னத்தில் மண்னை அள்ளிப்போட்ட மஹிந்த அவர்களை எந்தவகையிலாவது பழிவாங்கவேண்டும் என்ற என்னமே அவர்களுக்கு மேலோங்கியிருந்தது.

மேற்குலகம் மஹிந்தவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளை பூரணமாக தமிழ்மக்கள் ஆதரித்தார்கள்.
அதே நேரம் மஹிந்த அவர்கள் 13ம் திருத்தத்தின் மூலம் கூடுதலான அதிகாரங்களை உங்களுக்கு தறுகின்றேன் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என்று அழைத்தபோதும், தீர்வுகளை தங்கத்தட்டில் வைத்து மஹிந்த தந்தாலும் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயார் இல்லை என்றே கூறியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது, அந்த சந்தர்ப்பத்தை மஹிந்தவுக்கு எதிராக பயன்படுத்தி அவரை வீழ்த்திவிட்டு, நல்லரசாங்கம் என்ற போர்வையில் மைதிரி பால சிரிசேன அவர்களை ஜனாதிபதியாகவும், ரணில் அவர்களை பிரதமராகவும் ஆக்கிவிட்டு, எதிர்க்கட்சி தலைவராக தமிழ்மக்களின் தலைவரான சம்பந்தன் ஐயா அவர்களும் பதவிகளை ஏற்றுக்கொண்டார்கள்.

இந்த அரசாங்கம் தமிழ்மக்களின் பூரண சம்மதத்துடன் வந்தது மட்டுமல்ல, இந்த நல்லரசாங்கம் வந்தன் மூலம் எங்களுக்கு விடிவு கிடைத்துவிட்டதுபோன்றுதான், அவர்களின் நடவடிக்கைகளும் அமைந்திருந்தன...

இந்த நடவடிக்கைகள் மூலம், மேற்குலகின் இலங்கை சம்பந்தப்பட்ட எதிர் நடவடிக்கைகளில் தொய்வு நிலை ஏற்பட்டது எனலாம்.
இந்த நல்லரசாங்கம் அப்பாவிபோன்று நடித்துக்கொண்டு, ஐ.நா. சபையின் நடவடிக்கைகளை தாமதபடுத்தியது மட்டுமல்ல, அதன் மூலமாக இலங்கை அரசாங்கத்துக்கு வர இருந்த ஆபத்துக்களையும் தடுத்துவிட்டார்கள்.

இதன் மூலம் தமிழ் மக்களும், தமிழ் தலைவர்களும் பாரிய ஒரு தவரை செய்துவிட்டார்கள் என்பதே உண்மையாகும்.

தங்களுக்கு சகல விடயங்களிலும் இந்த நல்லரசாங்கம் உதவி செய்யும் என்று நினைத்த தமிழ் மக்களுக்கு பெரிய ஏமாற்றமே இப்போது ஏற்பட்டுவருகின்றது, ராணுவம் கைப்பற்றிய ஒரு சில இடங்களை விடுவித்ததை தவிர வேறெந்த லாபமும் தமிழ்மக்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை,
அபிவிருத்தி விடயங்களிலும், காணாமல்போனவர்களை தேடிக்கொடுப்பதிலும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதிலும், அரசியல் தீர்வை வழங்குவதிலும் இந்த நல்லரசாங்கம் நாடகமாடிக்கொண்டுள்ளது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுவருகின்றார்கள்.

மேற்குலகம், மஹிந்த ஆட்சியை எதிர்த்தது போன்று, இந்த நல்லரசாங்கத்தின் மீது அலுத்தம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றார்கள், காரணம் இந்த நல்லரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ்மக்களும் உள்ளார்கள் என்பதனால் ஆகும்.

இதனால் நல்லரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதிலும், மேற்குலகத்தை தாஜாபண்னுவதிலும்தான் காலத்தை கடத்துகின்றார்களே தவிர தமிழ்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சிப்பதை நாம் காணமுடியவில்லை...

ஆகவே மஹிந்த ஆட்சி தொடர்ந்து இருந்திருக்குமேயானால், மேற்குலகின் அழுத்தம் கடுமையாக இருந்திருக்கும், அந்த அழுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் பல பிரச்சினைகளுக்கு இன்று தீர்வை பெற்றிருக்கலாம்..

சில தீர்வுகளை மஹிந்த தமிழ்மக்களுக்கு வழங்கினாலும், சிங்கள மக்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொண்டிருக்கமாட்டார்கள், காரணம் புலியை எலியாக்கியவர் அவர் என்ற என்னத்தினால், சிங்கள மக்கள் அவரை தவராக என்னமாட்டார்கள் என்பதினாலாகும்.

இந்த நல்லரசாங்கத்தை சிங்கள மக்கள் சந்தேக கண்கொண்டுதான் பார்க்கின்றார்கள், இந்த நல்லரசாங்கம் தமிழ் மக்களுக்கு சார்பானது என்ற என்னம் சிங்கள மக்களுக்கு இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.
அதனால் நல்லரசாங்கம் எந்த தீரவை தமிழ் மக்களுக்கு வழங்க முன்வந்தாலும்,அதனை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்மாட்டார்கள்.

அதனால் இந்த நல்லரசாங்கத்தை கொண்டுவந்ததினால் தமிழ் மக்களுக்கு பலவகைகளிலும் நஸ்டம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்...

நல்லரசாங்கத்தை கொண்டுவந்ததினால் வெளிநாட்டு அழுத்தங்களும் குறைந்து விட்டது, அதே நேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளும் தீரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

ஆக, அரசனும் இல்லை புரிசனும் இல்லை என்ற நிலையே தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினால், தவறேதும் இல்லை என்றே கூறலாம்.
எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -