இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தின செய்தி..!

ஜெம்சித் அஸீஸ்-
நாட்டுப்பற்று நாட்டின் முன்னேற்றத்தில் கரிசனை நாட்டின் அபிவிருத்தியில் அர்ப்பணம் நாட்டின் வளங்களை மேம்படுத்துதல் நாட்டின் கல்வி சுகாதார பொருளாதார நிருவாக அரசியல் சீர்கேடுகளைக் களைதல் நாட்டின் இன மத கலாசார தனித்துவங்களை உத்தரவாதப்படுத்தல் நாட்டின் தேசிய நலன்களை அடையாளப்படுத்தி அவற்றிற்கான ஒத்துழைப்புகளை சகல இன மக்களிடமிருந்தும் பெறுதல் நாகரிகம் என்ற ஓர் இலக்கை நோக்கி நாட்டை முன் நகர்த்துதல் என்பன சுதந்திரமடைந்த ஒரு தேசத்தின் சிறப்பான அடையாளங்களாகும்.

இந்த அடையளங்கள் நாட்டு மக்களிடையே வெட்ட வெளிச்சமாகப் பிரகாசிக்கும் ஒரு நிலை இலங்கையில் உருவாக வேண்டும். அதன் மூலம் சின்னஞ் சிறிய இலங்கைத் தீவு உலகில் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். தனது வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் பிற நாடுகளுக்கும் பாடம் கற்பிக்கும் ஒரு தேசமாக இலங்கை திகழ வேண்டும்.

ஜப்பானைப் போல் ஜேர்மனியைப் போல் வளர்ந்து நிற்கும் மற்றுமொரு தேசமாக நாளைய உலகில் இலங்கை மிளிர வேண்டும்.

இத்தகைய கனவுகளோடு மலரும் 69 வது சுதந்திர தினத்தை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வரவேற்கின்றது. இந்தக் கனவுகள் நனவாக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதையும் அர்ப்பணத்தோடு தேசத்தைக் கட்டியெழுப்புவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நல்லதொரு தேசத்தைக் கட்டியெழுப்புதல் என்பது உன்னதமான பிரஜைகளை உருவாக்குவதே ஆகும்.

ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
தலைவர் - இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -