கிழக்கில் காணி மற்றும் வீடற்றவர்களின் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை.!

ட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மற்றும் வீடுகள் இல்லாத பிரச்சினை பாரியளவில் காணப்படும் நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாகாவே ஜனாதிபதியின் ஏறாவூர் விஜயத்தில் ஆயிரத்து 762 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன் இதில் சிங்களம் முஸ்லிம் மற்றும் தமிழ் என மூவின மக்களுக்கு லழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்,

மேலும் வீடுகள் இன்றி பல ஆண்டு காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்த 962 பேருக்கான புதிய வீடுகளும் இதன் போது வீடற்றவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டம் வரட்சியினால் அடிக்கடி பாதிக்கப்பட்டுவரும் நிலையில் 10 ஆயிரம் பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் இதன் போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -