ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட நெடுந்தீவு சல்லிக்களப்பு வீதியில் இரவு நேரங்களில் தெரு விளக்குகள் ஒளிர்வதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் தாங்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இவ்வீதியூடாக இரவு வேளைகளில் பயணம் செய்து வருகின்றனர் .உரிய நேரத்திற்கு கிண்ணியா பிரதேச சபையினால் வரிப் பணம் அறவீடு செய்யப்படும் போது ஏன் தங்களுடைய கிராமத்துக்கான தெரு விளக்குகளைப் பொறுத்த முடியாது? என மக்கள் கேட்டு நிற்கின்றனர்.