குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் அமைச்சர்..?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரசின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மற்றும் பஷீர் சேகுதாவுத் ஆகியோர் இடையே ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலையை தனக்கு சாதகமாக்க நினைக்கிறார் முஸ்லிம் அமைச்சர் ஒருவர். அவர்களிடையே ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலையை இரண்டு வழிகளில் தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைகிறார்  அந்த முஸ்லிம் அமைச்சர். ஆனால் இந்த இரண்டு வழிமுறைகளுக்குமான சாத்தியம் குறைவாகவே உள்ளது.

பஷீர் சேகுதாவுத் மு.கா தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார். அது சில நேரம் சாதகமாக முடிந்தால் தலைமைத்துவ இடைவெளி ஏற்படும் அதனை நிபர்த்திக்க தலைமைத்துவம் ஒன்றை தேடுகின்ற போது கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்கான முன் கூட்டிய செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸிற்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலையை பூதாரமாக்கி தலைமைத்துவத்தை வெளியேற்றுவதன் மூலம் மு.காவினை நலிவடைய செய்து தன் கட்சியினை மக்களிடையே வேரூன்ற வைக்க வேண்டும் என்ற இராண்டாவது செயற்பாட்டையும் இன்னும் சிலரையும் வைத்து தூண்டிவிட்டிருக்கிறார். மு.கா வினை அழித்து விட வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை அழிக்க நினைக்கும் அரசியல்வாதிகளுக்கு மு.கா வின் தலைவரும் உயர் பீட உறுப்பினர்களும் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். தலைவர் அஷ்ரஃப் இன் பல தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்தெடுக்கபட்ட கட்சியை சுயநல அரசியலை முன்னெடுப்போர் சூரையாடி செல்லும் அளவு நலிவடைந்தவர்ளாக இருந்து விடக் கூடாது.

மு.கா விற்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண நிலை சுமூகமான தீர்வினை எட்டி ஆலமரமாய் ஆயிரம் விழுதுகளுடன் வாழ வேண்டும்.
கிழக்கான் அஹமட் மன்சில்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -