மருதானை ஜும்ஆப்பள்ளிக்கு சூரிய மின்சக்தி இணைப்பு..!

எம்.எஸ்.எம்.ஸாகிர்-
னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசீர்வாதத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலின் பேரில் மின்சாரம், மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா ஆகியோரின் ஆலோசனையில் இலங்கை சூரிய மின்சக்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை என்பனவற்றின் பூரண அனுசரணையின் கீழ் மின்சக்தி திட்டத்தின் அபிவிருத்தி முற்போக்கு - சூரிய மின்வலுசக்தி ஒன்றிணைப்பு அண்மையில் கொழும்பு - 10 மருதானை ஜும்ஆ மஸ்ஜித்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், எம்.தாஸின் மௌலவியால் துஆப் பிராத்தனை நிகழ்த்தப்பட்டது. நாட்டுக்காகவும், நாட்டுமக்களின் பாதுகாப்புக்காகவும் பொறுப்புடன் சேவையாற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மற்றும் அமைச்சர்களும், சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையுடனும், நாட்டின் சகல இன மக்களும் சரீர சௌபாக்கியங்களுடன் வாழவும் வரட்சி நீங்கி மழை பொழியவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

மருதானை ஜும்ஆ பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு, மின்சக்தி, மின்வலு அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் மேலும் ஜமாஅத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -