களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை கட்டிட்டத்தை திறந்து வைத்த ஜனாதிபதி - படங்கள்

சப்னி அஹமட்- 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் அழைப்பின் பெயரில் மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி தள வைத்தியசாலையில்  இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியில் 514 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் விடுதித் தொகுதியை நேற்று (01) ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனா கையளித்தார்.  

அங்கு கலந்துகொண்ட ஜனாதிபதி நோயாளர் விடுதிக்கு முதலாவதாக அனுமதிக்கப்பட்ட நோயாளியை பதிவுசெய்து வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் உட்பட மாகாணத்தின் சுகாதாரத் துறை முன்னேற்றத்திற்காக பாடுபடும் அதிகாரிகளான கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாணப்பணிப்பாளர், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கும் சேவையைப் பாராட்டி ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கப்பட்டன.

எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, அமைச்சர் தயா கமகே, பிரதி அமைச்சர்களான அமீர் அலி, பைசல் காசிம்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாந்து, முதலமைச்சர் நசீர் அஹமத், மாகாண அமைச்சர்களான ஆரயவதி கலப்பத்தி,தண்டாயுதபானி இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் கெனிசி சுகானுமா, களுவாஞ்சிக்குடி மருத்துவமனை அத்தியட்சகர் மருத்துவ கலாநிதி சுகுணன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -