யு.எல்.எம். றியாஸ்-
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் வருடாந்த கொடியேற்றவிழா நேற்று ஆரம்பமானது. (27.02.2017) கல்முனை கடற்கரைப் பள்ளி வாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் 195வது வருடாந்த கொடியேற்ற விழா நேற்று அஸர் தொழுகையை தொடர்ந்து ஆரம்பமானது.
கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் டாகடர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் தலைமையில் கொடியேற்ற வைபவம் இடம்பெற்றது. வருடம் தோறும் ஜமாதுல் ஆகிர் பிறை ஒன்று முதல் பிறை பனிரெண்டு வரை இக் கொடியேற்ற விழா நடைபெறும்
12 நாட்கள் இடம்பெறும் இவ் விழாவில் பக்கீர் ஜமாத்தினரின் ராத்திபுக்கள்,உலமாக்கள் மார்க்க அறிஞ்சர்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளன. இவ் விழாவில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலாளர் முஹம்மட் கனி , பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் ,உலமாக்கள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பெருமளவிலானவர்கள் கலந்துகொண்டனர்.
கொடி இறக்கும் தினமாகிய எதிர்வரும் 11ம் திகதி சனிக்கிழமை லுஹர் தொழுகையை தொடர்ந்து மாபெரும் கந்தூரி வழங்கப்பட்டு நிறைவடைய உள்ளது.


