கிழக்கு மாகாணத்தில் 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம்..!

எப்.முபாரக்-
கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனத்திற்காக வேண்டி மத்திய கல்வியமைச்சிலிருந்து அமைச்சரவை அனுமதியோடு 445 பேருக்கான அனுமதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனிஸ் தெரிவித்தார். இந்நியமனத்தின் போது அம்பாறை மாவட்டத்தில் 135 பேருக்கும் ,மட்டக்கிளப்பு மாவட்டத்தில் 61 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 249 பேருக்குமாக 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அச்சங்கத்தில் தலைவர் தெரிவித்தார். 

கூடிய விரைவில் அனைவருக்கும் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும், கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனீஸ் தெரிவித்தார். பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வருகின்ற சிலர் தாமதமாக தங்களது தகவல்களை வழங்கியவர்களின் விபரங்கள் மாகாண கல்வி அமைச்சரினால் அமைச்சசரவை அங்கீகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -