அமைச்சர் ரிஷாத்தை பழிவாங்கவே YLS.ஹமீத் மின்னலுக்குச் சென்றார்.

முகம்மட் இஷாட்.-

டுநிலை அரசியல் நேர்காணல் தொலைக்காட்சி நிகழ்வுகளில் அ.இ.ம.கா கட்சி செயலாளர் YLS ஹமீட் அவர்களை அழைக்க தயங்குவது ஏன் ?

கடந்த ஞாயிறு அன்று அ.இ.ம.கா செயலாளர் YLS ஹமீட் அவர்கள் சக்தி டீவியில் ஊடகவியலாளர் ரங்கா நடாத்திய மின்னல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகா தவறு என்று குறிப்பிட்டு ஒரு சிலர் செயலாளர் YLS ஹமீட் அவர்களை சமூக வலயத்தளங்களில் உதாரணமாக போலி முகநூல்களிலும் , சிலர் சொந்த முகநூல்களிலும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்..!!

ஆனால் இவர்களது விமர்சனங்கள் நியாயமற்றது. ஏன் இவர்கள் விமர்சனம் செய்கின்றார்கள்? உண்மையினை மூடி மறைப்பதற்காகவா என்ற சந்தேகம் அது ஒரு பக்கம் இருக்க......

YLS ஹமீட் அவர்கள் சக்தியின் மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு அமைச்சர் றிசாட் மீது ரங்கா கொண்ட கோபத்தை YLS அவர்களை வைத்து தீர்த்துக்கொண்டார். வெறும் பழிவாங்கலுக்காக அமைத்துக்கொண்ட மேடையே அன்றைய மின்னல் நிகழ்ச்சி மற்றும்படி YLS அவர்கள் கூறியதில் எவ்வித உண்மை தன்மையும் இல்லை எனவும் ஒரு சிலர் அறிக்கையினை இட்டுக்கொண்டிருக்கின்றனர்..

ஊடகவியலாளர் ரங்கா ஒரு நடுநிலைவாதி இல்லை என்பது கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும் அதை மறுக்க முடியாது. ஆனால் YLS அவர்கள் ஒரு இனவாதியல்ல அவர் ஒரு முஸ்லீம் அரசியல்வாதி என்பதே உண்மை..

கடந்த பல நாட்களாக அ.இ.ம.கா கட்சி தலைமைக்கும் அவருக்கும் இடையில் கட்சி உன்னுடையதா என்னுடையதா என்ற பிரட்சினைகள் நடந்து நீதி மன்றம் வரைக்கும் சென்று வழக்கு நடந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விடையம்....

அவ்வாறு அறிந்திருந்தும் நமது முஸ்லீம் ஊடகங்கள் எவையுமே அவர்களை அழைத்து நேர்காணல் நிகழ்ச்சிகள் எதுவுமே நடாத்தவில்லை. யார் யாரையெல்லாம் அழைத்து நேர்காணல் நிகழ்ச்சி நடாத்தும் நாம் YLS அவர்களை அழைத்து நேர்காணல் நடாத்ததன் காரணம் என்ன. அவர் பிரட்சினையினையும் அவரையும் கணக்கில் எடுக்கவில்லையா, இல்லை மறந்து விட்டோமா...

நடுநிலை ஊடகங்கள் அவரை அழைத்து நேர்காணல் நடாத்தி இருந்தால் நிச்சயமாக அவர் மின்னல் நிகழ்ச்சிக்கு போக வேண்டிய அவசியமே இருந்திருக்காது. நாம் எவரும் அவரை கண்டுகொள்ளவில்லை அந்த சந்தர்ப்பத்தை ரங்கா றிசாட் பதியுதீன் அவர்களை பழிவாங்கும் திட்டமாக பயன்படுத்திக்கொண்டார் எனபதை யாருமே மறுக்க முடியாது...

இவ்வாறான விடையங்களை கவனத்தில் எடுக்காமல் நட்டாற்றில் விட்டுவிட்டு கடைசியில் சமூகதுரோகி என்பது போல் YLS அவர்களை சித்தரித்துக்காட்டுவது உயிரோட்டம் அற்றது...

மிகவிரைவில் வெளிச்சம், அதிர்வு, வியூகம் T.V இன் நான் பேச நினைப்பதெல்லாம், Importmirror போன்ற ஊடக நிகழ்ச்சிகளுக்கு YLS ஹமீட் அவர்களை அழைத்து நேர்காணல் நிகழ்வுகளின் உள்வாங்கி உண்மை எது பொய் எதுவென்று மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்பதே வடகிழக்கு மக்களின் அவா...!!

முடியுமானால் செயலாளர் YLS ஹமீடோடு விவாதம் செய்வதற்கு அமைச்சர் றிசாட் அவர்களையும் அழைத்து ஏற்பாட்டை செய்து கொடுத்தால் இன்னும் உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்....!!!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -