உயர் தேர்ச்சியுற்ற உயர்தர மாணவர்களுக்கு சாய்ந்தமருது சமூக நலன்புரி மன்றத்தினால் கௌரவம்!
எம்.வை.அமீர்-

டந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/த) பரீட்சையில் திறமையாக சித்தியடைந்த மாணவர்களைபாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 2017. 01. 18 ஆம் திகதி சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சமூக நலன்புரி மன்றத்தின் தலைவர் வைத்திய கலாநிதி எம்.எம்.ஏ.றிஷாத் தலைமையில், சமூக நலன்புரி மன்றத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியக் கலாநிதி என். ஆரிப் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாகவும், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மருத்துவம் பொறியியல் உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளையும் சேர்ந்த கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை மற்றும் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்விகற்ற சுமார் 44 மாணவர்கள் இங்கு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின்போது உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் உயர் தேர்ச்சியுற்ற உயர்தர மாணவர்களும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -