"பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும்" காட்டி மக்களை ஏமாற்றுகின்றனர்..!

லங்கை அரசியல் வரலாற்றில் முஸ்லிம்களுக்கு முன்பு இருந்த பிரச்சினைகளைவிட, இப்போது பல பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளதை நாம் அறிவோம். இந்த காலப்பகுதியில் நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளன என்பதை, நாம் நடுநிலையாக இருந்து பார்க்க வேண்டும். அந்த வகையில் எமக்கு எதிராக உள்ள இனவாத பிரச்சினைதான் முதலிடம் வகிக்கின்றது.

அந்த வகையில் பள்ளிவாசல் பிரச்சினைகள்,

இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் பிரச்சினைகள், என்று பல பிரச்சினைகள் எம் கண்முன்னே பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் இடம்பெயர்ந்த முசலி மக்களின் பிரச்சினைக்காக அ.இ.மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாட் பதியுதீன் அவர்கள் போராடிக்கொண்டு வருகின்றார், அவருடைய இந்த போராட்டத்துக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும், தனக்கு எதிராக பல கலங்கங்களை அரசியல் எதிரிகள் அவருக்கு ஏற்படுத்தினாலும், அதனையெல்லாம் பொருட்படுத்தாது அவர் போராடும் விடயத்தை எம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.

அதே நேரம் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ரஹுப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம்களுடைய பல பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் பேசியுள்ளார் அதனை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. அதே நேரம் அரசியல் போட்டியின் காரணமாக முசலி மக்களின் பிரச்சினையில் தலைவர் ஹக்கீம் அவர்கள், கரிசனை காட்டுவதாக தெறியவில்லை...

இருந்தாலும், இப்படியான பிரச்சினைகளை பேசுவதும், போராடுவதாக கூறுவதும் பிரச்சினைகள் தீர்வதற்கு வழிவகுக்குமா? என்பதே கேள்வியாகும்.

பாராளு மன்றத்தில் பேசிவிட்டாலோ, அல்லது தொலைக்காட்சிகளில் பேசிவிட்டாலோ, எங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைப்பது போல்தான் இவர்களின் நடவடிக்கை அமைகின்றது.. எங்கள் தலைவர் பேசி விட்டார் என்று அவர்களின் ஆதரவாளர்கள் கூறி பெருமைப்பட்டுக் கொள்கின்றார்களே தவிர இதனால் நமக்கு கிடைத்த லாபம் என்ன என்பதை கவணிக்க தவறிவிடுகின்றார்கள்.

நாம் ஒரு டாக்டரிடம் செல்கின்றோம் அவர் உங்களுக்கு காய்ச்சல் என்று சொல்லிவிட்டு, அந்த வருத்தத்தை கண்டுபிடித்து சொன்னதற்கு பணம் செலுத்துங்கள் என்கின்றார், நீங்கள் அவரிடம் என்ன கேட்பீர்கள்... நோயை கண்டுபிடித்து விட்டீர்கள் பாராட்டுகிறேன், அதற்குறிய மருந்தை தாருங்கள் என்றுதானே கேட்பீர்கள்..... நோயைத்தான் நான் கூறுவேன், மருந்து தரமாட்டேன் என்று கூறும் ஒரு டாக்டரும், ஒரு டாக்டரா? என்று நீங்கள் கேட்க மாட்டீர்களா? அதே போன்றுதான் நமது போலி அரசியல்வாதிகளும் நடந்து கொள்கின்றார்கள்..

பிரச்சினைகளை இனம் கண்டு பேசுவோம், ஆனால் தீர்வை பெற்றுத்தரமாட்டோம் என்று கூறுவது போல்தான் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

அப்படியென்றால் எப்படி பிரச்சினையை தீர்ப்பது என்று நீங்கள் கேட்கலாம்.

பிரச்சினைகளுக்கு தீர்வை பெறுவதற்கு பல வழிகள் உள்ளது, அதனை நமது அரசியல் வாதிகள் பின்பற்ற மாட்டார்கள், அப்படி அவர்கள் அதனை பின்பற்றினால் சமூகத்துக்காக அவர்கள் பல இன்னல்களை சந்திக்க வேண்டிவரும். நமது அரசியல் வாதிகள் இன்னல்களுக்குள் மாட்டிக்கொள்ளாமல் "பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும்" காட்டிக் கொண்டு நாங்களும் போராடுகின்றோம் என்று அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டிருப்பதைத்தான் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நீங்கள் கேட்கலாம்.. அவர்களால் பேசத்தானே முடியும் அதற்காக சண்டையா பிடிக்கமுடியும் என்று...

அது தவறான என்னம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்...

நாம் ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் பேசுகின்றோம் அதேநேரம் நாட்டின் ஜனாதிபதி, பிரதமர்களோடும் பேசுகின்றோம் அதற்கும் தீர்வு கிடைக்காதுவிடின், நாட்டின் நீதிமன்றத்தின் உதவியை நாடுகின்றோம், அதற்கும் தீர்வு கிடைக்காது விடின் ஐ.நா சபைவரையும் செல்ல முடியும், அதே போன்று இலங்கைக்கு உதவிவழங்கும் நாடுகளிடமும் முறையிட முடியும், அப்படி நாம் போராட துவங்கினால் நிச்சயமாக நமக்கு விடிவு கிடைக்கும். அதே நேரம் இதற்காக போராடியவருக்கு கஷ்டங்களும் கிடைக்கும்.

அவருடைய தியாகம் சமூகத்துக்கு விடுதலையை தேடித்தறும் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் நமது அரசியல் வாதிகள் அந்தளவுக்கு தியாகம் செய்ய துணிவார்களா? என்பது சந்தேகமே... ஐ.நா.சபை மனித உறிமைகள் அமைப்பின் தலைவர் மன்னர் அல்ஹுசைன் இலங்கை வந்தபோதும், பான்கிமூன் வந்தபோதும், சிறுபாண்மை மக்களின் நலன் சம்பந்தப்பட்ட அதிகாரி ரீட்டா அம்மையார் வந்த போது ஓடி ஒழிந்த நமது தலைவர்களைத்தான் நாம் காண்கின்றோம்.

ஏன்? ஓடி ஒழிந்தார்கள் என்று யாராவது அவர்களிடம் கேட்டோமா? அதற்கு பதில்,.. அவர்களை சந்தித்து பிரச்சினைகளை சர்வமயபடுத்தினால், ஆட்சியாளர்கள் அவர்களை துரத்திவிடுவார்கள். அதனால் நமது சுகபோக வாழ்க்கை பறிபோகி விடும் என்ற நப்பாசைதான் அதற்கு காரணம் எனலாம்.

உலகத்தில் சமூகத்தின் மீது பாசம்கொண்டு, தானாகவே முன்வந்து போராடி உறிமைபெற்றுக் கொடுத்த, வரலாறு பேசுகின்ற எந்த தலைவனும் சுகபோகமாக வாழ்ந்த வரலாறுகள் இருக்கின்றதா? என்றால்...

இல்லை என்றே பதில் பதியப்படும்.

நீங்கள் இன்னுமொரு கேள்வியை கேட்கலாம்.... தமிழர்களும் இப்படித்தானே போராடுகின்றார்கள், அவர்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா என்று...

அவர்கள் கேட்பது தனிநாடு,
நாம் கேட்பது வாழ வழி....
என்பதை புரிந்து கொள்ளவேண்டும்...

ஆகவே வீரவசனம் பேசிவிட்டு இதோடு எங்கள் கடமை முடிந்து விட்டது என்று நினைக்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும் நமக்கு விடிவு என்பது இருட்டாகத்தான் இருக்கும்...

எம்.எச்.எம்.இப்ராஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -