கௌரவ விருது கிடைத்துள்ளமை பெருமைப்பட வேண்டிய விடயம் - ஷிப்லி பாறுக்

எம்.ரீ.ஹைதர் அலி-
கிட்டத்தட்ட 19 மாத காலமாக காத்தான்குடி நகரசபையானது அதிகளவிலான சேவைகளை பொதுமக்களுக்கு திறம்பட மேற்கொண்டு வருவதோடு, கடந்த காலங்களில் அரசியல் சார்ந்த ஒன்பது நகரசபை உறுப்பினர்களைக் கொண்டு இயங்கியபோது கூட இவ்வாறான அபிவிருத்தி நடவடிக்கைகள் திறம்பட செயற்படுத்த முடியவில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் எவ்வித அரசியல் உறுப்பினர்களை உள்வாங்காமல் நிர்வாகத்தின் மூலம் திறம்பட செயலாற்ற முடியும் என்பதனை சுட்டிக்காட்டுகின்றது என பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

காத்தான்குடி நகரசபைக்கு பொறியியலானர் ஷிப்லி பாறுக் மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்காக இயந்திரமொன்று முதலமைச்சரினால் அன்மையில் வழங்கி வைக்கப்பட்டதோடு, நகரசபை நிதியினூடாக கொள்வனவு செய்யப்பட்ட ஒரு இயந்திரத்துடன் சேர்த்து இரண்டு இயந்திரங்களும் கையளிக்கப்பட்டன இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்...

காத்தான்குடி நகரசபையானது தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளுக்காக போதியளவிலான வாகனங்களின்மையால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வந்ததோடு, இதனை நிவர்த்தி செய்வதற்காக நகரசபையின் நிதியிலிருந்து இரண்டு உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்காக என்னிடம் ஆலோசனைகளை கேட்டிருந்தனர்.

இதனை கருத்திற்கொண்டு இயந்திரங்களை நகரசபையின் நிதியிலிருந்து கொள்வனவு செய்ய வேண்டியதொரு அவசியம் இல்லையெனவும் இதனை மாகாண முதலமைச்சரிடம் தெரியப்படுத்தி இயந்திரங்களை பெற்றுக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரியப்படுத்தினேன்.

இருந்தபோதும் இந்த இரண்டு உழவு இயந்திரங்கள் மாத்திரம் போதாத நிலையே காத்தான்குடி நகரசபைக்கு காணப்படுகின்றது. ஏனெனில் இதனை கொண்டு கிட்டத்தட்ட 50 சதவீதமான திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகளை மாத்திரமே அகற்றமுடியும், காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பிரதான வீதிகளை தவிர ஏனைய உள்ளக வீதிகளில் இருக்கும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை வாரத்தில் ஒரு தடவை மாத்திரமே அகற்றக்கூடியதாக இருப்பதால் இதனை கருத்திற்கொண்டு மேலும் பல இயந்திரங்களை காத்தான்குடி நகரசபைக்கு பெற்றுத் தருமாறு முதலமைச்சரிடம் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான செயத்திரன்மிக்க செயற்பாட்டு போட்டியில் காத்தான்குடி நகரசபைக்கு கௌரவ விருது கிடைத்துள்ளமையும் பெருமைப்பட வேண்டியதொரு விடயமாகும். ஏனெனில் நிர்வாகத்தினையும் அதன் அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாத்திரம் உள்ளடக்கியதாக இந்த விருதினை காத்தான்குடி நகரசபை பெற்றிருக்கின்றதென்றால் அதற்கு அவர்களது பாரிய பங்களிப்பும் வினைத்திரனுமாகும். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்களம் என்ற வேறுபாடுகளின்றி மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு என்ன வகையான செயற்திட்டங்கள் தேவைகள் இருக்கின்றனவோ அவைகளில் மிகவும் முன்னுரிமையானை விடயங்களை அறிந்து அதனை திறம்பட மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம் மேற்கொள்ளும் நிலையம் ஒன்றினை செங்கலடி கொடுவாமடு பிரதேசத்தில் பெற்றுக்கொடுத்து இங்குள்ள கழிவுகளை அங்கு எடுத்து செல்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மிக விரைவில் திண்மக் கழிவுகளை அகற்றுதல் பிரச்சினைக்கு ஓர் தீர்வு கிடைக்கப்பெற இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வானது காத்தான்குடி நகரசபையின் செயலாளர் எஸ்.எம். சபி தலைமையில் நடைபெற்றதோடு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களும் ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர், யூ.எல்.ஏ. அசீஸ், மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம். ஷரீப், மட்டக்களப்பு மாவட்டஉள்ளுராட்சி உதவி ஆணையாளர்சித்ரவேல் நகரசபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -