ஏறாவூர்- டாக்டர் பதியுதீன் மஹமூத் வித்தியாலயத்தில் மீலாத் விழா

ஏஎம் றிகாஸ் -

ல்வியமைச்சின் விஷேட அறிவுறுத்தலுக்கமைவாக பாடசாலை மட்டத்தில் மீலாத் விழாக்களைக் கொண்டாடும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஏறாவூர்- டாக்டர் பதியுதீன் மஹமூத் வித்தியாலயத்தில்; ஏற்பாடு செய்யப்பட்ட விழா 10.01.2017 வெகுவிமரிசையாக நடைபெற்றது.

அதிபர் எம்எம் ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் (ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிபதி) சட்டத்தரணி ஏஎல் முனாஸ் இதன் பிரதம அதிதியாகவும் கல்வி வலயத்தின் சமாதானக் கல்வி மற்றும் சமூக ஒருங்கிணைப்பு இணைப்பாளர் எம்ஜிஏ. நாஸர் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர் ஏ.அப்துல் நாஸர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்களும் பிரசன்னமாயிருந்த இந்த விழாவில் மௌலவி ஏஏம் றியாஸ் மார்க்கச் சொற்பொழிவாற்றினார்.

முஸ்லிம் சமய விழுமியங்களை மேம்படுத்தும் நோக்கில் மீலாத் விழாவினை கொண்டாடுமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களைப் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -