தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நாளை மறுதினம் ஆரம்பமாகும் -முதல்வர் அதிரடி அறிவிப்பு

மிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஜல்லிக்கட்டினை நடத்தவேண்டும் என்று கூறி தமிழகமெங்கும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் அமைதியான முறையில் அறவழியில் 5வது நாளாக போராடி வருகிறார்கள். இதன் காரணமாக நேற்று முன் தினம் டெல்லிக்கு சென்று, நேற்று பிரதமரைப் பார்த்து தமிழகத்தின் கோரிக்கைக்கு உதவுமாறு தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பிரதமர் மோடி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளதால் உதவ இயலாது என்று கைவிரித்துவிட்டார். இதனால் உடனடியாக தமிழகத்திற்கு திரும்பாமல் டெல்லியிலேயே தங்கி சட்டநிபுணர்களுடனும், தமிழக அரசின் உயரதிகாரிகளுடனும் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக முதல்வர். இதனைத் தொடர்ந்து இன்று காலையில் டெல்லியின் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி, ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும். இது தொடர்பான சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வரைவு அனுப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசின் உயர் அதிகாரிகள் மேற்கொள்வர். மத்திய அரசின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் மாநில அளவில்திருத்தம் கொண்டு வர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு ஓரிருநாட்களில் நடைபெறும் என்பதால், பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -