தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழாவில் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் பங்கேற்றார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் வியாழக்கிழமை (19.01.2017) நடைபெற்றது.
மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து பண்பாட்டு பவனி மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம் வரைச் சென்றடைந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி, எம்.ஏ. சுமந்திரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைரெட்ணசிங்கம், உட்பட அக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.






