த.ரூபன் எழுதிய "ஜன்னல் ஓரத்து நிலா" கவிதை நூல் வெளியீட்டுப் பெருவிழா..!

ம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டு பேரவையும் நந்தவனம் பவுண்டேசனும்- (இந்தியா) இணைந்து நடாத்தும் இலக்கிய சந்திப்பும் நூல் வெளியீடும்.

ஈச்சிலம்பற்றையைச் சேர்ந்த கவிஞர் த.ரூபன் எழுதிய ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் வெளியீடும். ஈச்சிலம்பற்று கோட்டத்தில் தரம் 1இல் புதிதாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு தலா 1000ரூபாய் அடிப்படையில் வங்கியில் சிறுவர் சேமிப்புக் கணக்கு திறந்து சேமிப்பு புத்தகம் கையளிக்கும் நிகழ்வும் மற்றும் 100 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட இருக்கின்றன.

இந் நிகழ்வில் வெருகல்- ஈச்சிலம்பற்று பிரதேச ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்கள் சமூக தொண்டர்கள் மற்றும் இலக்கிய வாதிகள் என பலரும்  கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு இந்தியா. குவைத். மலேசியா .சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து இலக்கிய வாதிகள், தொழில் அதிபர்கள், கல்லூரி முதல்வர்கள் என பலரும் வருகை தர இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ் விழா -29-01-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஈச்சிலம்பற்று ஸ்ரீ சண்பகா மகாவித்தியாலயத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகிறேம்.

ஊடக அனுசரணை - இம்போட் மிரர் ஊடக வலையமைப்பு , சிகரம் சர்வதேச வானொலி.

அனைத்து தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் வருக வருக என வரவேற்கிறேன்.
தகவல் - விழா கதாநாயகன் - கவிஞர்.த.ரூபன் 
- (தலைவர்) ஊற்றுவலையுலக எழுத்தாளர்கள் மன்றம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -