செல்போன் வாங்கச்சென்ற கல்முனை இளைஞரை காணவில்லை

காரைதீவு நிருபர் சகா

கைச்செயினை விற்று சென்போன் வாங்கச்சென்ற 17வயது இளைஞனைக் கடந்த மூன்று தினங்களாகக்காணவில்லை என கல்முனைப்பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. 

கல்முனை முதலாம் பிரிவு கொஸ்தாபல் வீதியைச்சேர்ந்த ஜெயந்திரன் டிலான் எனும் இளைஞரே இவ்விதம் காணாமல்போனவராவார். கடந்த சனிக்கிழமை காலை 8மணியளவில் வீட்டைவிட்டுக்கிளம்பிச் சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லையெனவும் உற்றார் உறவினர்வீடுகளிலெல்லாம் தேடியபோதும் இன்னும் கிடைக்கவில்லையெனவும் குடும்பத்தார் தெரிவித்தனர்.

கடந்த க.பொ.த சா.த.பரீட்சைக்குத்தோற்றிய 5பேர் கொண்ட குடும்பத்தில் மூத்தவரான அவர் செல்போன் வாங்கவேண்டுமென்பதில் விடாப்பிடியாக இருந்ததாகக்கூறப்படுகின்றது. தனது கைச்செயினை விற்றாவது செல்போன் வாங்கவேண்டும் என நண்பர்களிடம் கூறியிருந்தாராம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -