அக்கரைப்பற்றைச் சேர்ந்த 07பேர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்

அபுஅஹமத், அக்கரைப்பற்று-
ம்மாதம் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற இருக்கின்ற சட்டத்தரணிகளுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏழு பேர் சட்டத்தரணிகளாக (Attorney-at-Law) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். 

இந்நிகழ்வானது பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவான் மற்றும் ஏனைய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் முன்னிலையில் கொழும்பு-12 யில் அமைந்துள்ள உயர் நீதிமன்ற கட்டடத்தொகுதியில் (Supreme Court Complex) நடைபெறவுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையான சட்டத்தரணிகள் சத்திப்பிரமாணம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். 

சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள சட்டத்தரணிகள் விபரம்.. 

1. முஹம்மது மீராசாஹிப் றதீப் அஹமட் 
2. ஆதம் லெப்பை ஆஸாத் 
3. பதுர்டீன் முஹம்மது சகீக்
4. இஸ்ஸதீன் ரஸா அஹமட் 
5. அபுல் காசிம் பாத்திமா சஸ்னா 
6. முஹம்மது நபீல் பாத்திமா ரிகாஷா
7. செயிட் அஹமட் பாத்திமா சஸ்னா 

மேலும், இம்முறை வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளின் படி அக்கரைப்பற்று பாடசாலைகளில் நான்கு பேர் மருத்துவத்திற்கும், ஐந்து பேர் பொறியியல் துறைக்கும் ஏனைய துறைகளிலும் பலரும் தெரிவு செய்ப்பட்டிருந்தமையும் சிறப்பம்சமாகும்.

இவர்கள் அனைவரும் தாம் கற்ற பாடசாலைக்கும் பிறந்த ஊருக்கும் தான் சார்ந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நற்பிரஜைகளாக வர வாழ்த்துகிறோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -