கொட்டும் மழையிலும் யாழில் மாபெரும் பேரணி..!


பாறுக் ஷிஹான்-
யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு நடைபவனி இன்று காலை யாழ் பல்கலைக் கழக மருத்துவபீடம் முன்பாக ஆரம்பமாகியுள்ளது.

இந்தப் பேரணியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் யாழ் பல்கலைக் கழக மருத்துவபீட மாணவர்களுடன் இணைந்து ஏனைய பீட மாணவர்கள், கொக்குவில் தொழிநுட்பவியல் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர் கலாசாலை மாணவர்கள், இலங்கை ஆசிரியர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பொது அமைப்புக்கள், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தப் பேரணியில் கலந்து கொண்டுள்ள மருத்துவபீட மாணவர்கள் “ஏழைகளுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியா?”, “இலவசக் கல்விக்கு அச்சுறுத்தல்”, “பணக்காரர் மட்டும் வைத்தியர் ஆவதா?”, நல்லாட்சியின் கறுப்புப் புள்ளி உள்ளிட்ட பல்வேறு பாதாதைகளைத் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தாங்கியுள்ளதுடன் பல்வேறு கோஷங்களையும் எழுப்புகின்றனர்.

இந்த மாபெரும் பேரணி யாழ் மாவட்டச் செயலகத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வடமாகாண ஆளுநருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -