சீனாவின் கழிவுத் தொட்டியாக இலங்கை...!

மூத்த ஊடகவியலாளர் எம்.ஐ.முபாரக்-

பொ
ருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் இலங்கை அரசு ஹம்பாந்தோட்டையில் சீனாவின் முதலீட்டுடன் வர்த்தக வலையம் ஒன்றைத் தொடங்குவதை அறிவோம். ஆனால்,சீனாவின் நோக்கம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது அல்ல.சீன மக்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய தொழில்சாலைகளை அந்நாட்டில் இருந்து அகற்றி இலங்கை போன்ற வறிய நாடுகளில் அமைப்பதுதான் அதன் ஒரே நோக்கம்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அடிமை நாடுகளில் இலங்கையும் ஒன்று. 2008 இல் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் ஒலிம்பிக்கை நடத்த முற்பட்டபோது பீஜீங்க் நகரின் சூழல் தொழில்சாலை கழிவுகளால் கடுமையாகப் பாதிப்படைந்திருப்பதால் தமது விளையாட்டு வீரர்களை அங்கு அனுப்புவதற்கு சில நாடுகள் மறுத்தன. இதனால் அவமானமடைந்தன சீனா அந்நகரில் உள்ள தொழில்சாலைகளை ஆபிரிக்காவுக்கு மாற்றுவதற்கு முடிவு செய்தது.

ஆனால்,அதற்கு அதிக காலம் செலவாகும் என்பதால் அந்தத் திட்டத்தை இலங்கைக்கு மாற்றுவதற்கு உத்தேசித்தது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்தவிடம் இதற்காக 2000 ஏக்கர் நிலத்தை சீனா கேட்டபோது 750 ஏக்கரை மாத்திரம் வழங்க மஹிந்த முன்வந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போதைய அரசு 15,000 ஏக்கரை தெற்கில் வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது. தனது நாட்டைத் தூய்மைப்படுத்துவதற்காக இலங்கையை அதன் கழிவுத் தொட்டியாக மாற்றும் சீனாவின் சதியைத்தான் நாம் சர்வதேச முதலீடு என்று பெருமையுடன் அழைக்கின்றோம்.தற்போதுவரை பீஜிங் நகரில் இருந்த 70 தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -