சமூக விரோத செயல்களுக்கு எதிராக மாணவர் பேரணி..!

ஜுனைட்.எம்.பஹ்த்-
புதிய காத்தான்குடி மட்.பாத்திமா பாலிகா வித்தியாலய மாணவர்களினால் சமூக விரோத செயல்களுக்கு எதிரான பேரணி ஊர்வலம் பாடசாலை அதிபர் M.M.M.யூனுஸ் தலைமையில் இடம்பெற்றது. சிறுவர் துஷ்பிரயோகம், புகைத்தல், லஞ்சம், டெங்கு போன்ற சமூகத்திற்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய விடயங்கள் தொடர்பிலான மாபெரும் மாணவர்கள் பேரணியாக இடம்பெற்றது.

இப் பேரணி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் "சிறுவர்களாகிய எங்களை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குறிய குற்றமகும்", " சிறுவர்களாகிய எங்களைப் பாதுகாப்பது உங்கள் கடமை ", போதைப் பொருட்களை ஒழிப்போம்" , "புகைத்தலை நிறுத்தி புதுயுகம் படைப்போம்", " புகைப் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு"," டெங்கை ஒழிப்போம் பிள்ளைகளை காப்போம் ", " லஞ்ச ஊழலை ஒழித்து எதிர்கால தேசத்தை கட்டியெழுப்புவோம்" எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி பேரணியில் கலந்துகொண்டனர்.

எதிர்கால தலைவர்களாகிய மாணவர்கள் மத்தியில் சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போக்கை ஏற்படுத்தி இப்பேரணியை ஒழுங்கு செய்தமைக்கு பாடசாலை அதிபருக்கும் நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் பலராலும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் தெறிவிக்கப்பட்டதுடன் பேரணியில் ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், அதிகாரிகள், பொதுமக்கள், ஊடகத்துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -