மஃமூத் மகளீர் கல்லூரியின் பௌதீக வளத்தேவைகள் தொடர்பில் கேட்டறிந்த பிரதி அமைச்சர்.!

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரிக்கு இன்று (30) திங்கட்கிழமை விஜயம்செய்து கல்லூரியின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எம்.தௌபீக், ஏ.எம்.றினோஸ் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இவ்விஜயத்தின்போது பாடசாலையின் பௌதீக வளத் தேவைகள் தொடர்பில் கல்லூரி அதிபரிடம் பிரதி அமைச்சர் கேடடறிந்தார். அத்தோடு குறித்த பாடசாலையின் விளையாட்டு மைதான அபிவிருத்தித் தேவை தொடர்பிலும் வினவினார். அத்தோடு பாடசாலையின் கற்பித்தல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விஷேட செயற்பாடுகளை கேட்டறிந்தார். 

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் வேண்டிக் கொண்டமைக்கு அமைவாக மூன்று மாடிக் கட்டடம் ஒன்று அமைப்பதற்கான நிதியொதுக்கீடு கல்வி அமைச்சினால் விரைவில் கிடைக்கப் பெறவுள்ளாதாக இதன்போது குறிப்பிட்டார்.

மேலும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் மஃமூத் மகளீர் கல்லூரி மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றமைக்கு அதிபர், ஆசிரியர்களை பாராட்டியதோடு அம்மாணவர்களை மெஸ்ரோ அமைப்பின் மூலம் பாராட்டுவதற்கான நிகழ்வை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -