ஒற்றுமையற்ற முஸ்லிம் தலைவர்கள் - சிங்கள அமைச்சர் கவலைஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸினதும்  தலைவர்கள் ஐக்கியத்துடன் செயற்படுவார்களானால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் நிறையவே தீர்வுகளைக் கண்டு கொள்ள முடியும். தேசிய ரீதியாக உங்களது சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்களுக்கு தீர்வு காணப்பதற்கு இவர்கள் இருவரினதும் ஒற்றுமை மிக அவசியம்

அமைச்சரவைக் கூட்டங்களில் கூட இவர்கள் முரண்பட்டுக் கொள்கிறார்களே..? உங்களது சமயத் தலைவர்கள் ஒன்றிணைந்து இவர்களது முரண்பாட்டை தீர்த்து ஐக்கியபடுத்த முயற்சிக்கக் கூடாதா?

இன்று (21) நான் இன்று தொலைபேசியில் உரையாடிய சிங்கள சிரேஷ்ட, பிரபல அமைச்சர் ஒருவர்தான் என்னிடம் இவ்வாறு கூறினார்

இதனை நான் எனது முகநூலில் பதிவிடவா எனக் கேட்டபோது நிச்சயமாக பதிவிடுங்கள் ஆனால், அமைச்சர்களாள ஹக்கீமும் ரிஷாத்தும் எனது நெருக்கமான நண்பர்கள். எனவே, எனது பெயரை வெளியிட்டு விடாதீர்கள். சிலவேளைகளில் அவர்கள் என்னுடன் கோபித்து விடுவார்கள். அவர்கள் இருவரும் தங்களது அமைச்சுகள் ஊடாக எனது ஆதரவாளர்கள் பலருக்கு தொழில் வழங்கியவர்கள் என்றார். ஆனால் இறுதியாக அவர் பயன்படுத்திய வார்ததைகளுக்கான அர்த்தத்தை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாது உள்ளது. நான் இதனை அவரிடம் கிண்டிக் கேட்டகவும் விரும்பவில்லை

அவர் இறுதியாக இவ்வாறு கூறினார் ”ரிஷாத் எமத்திதுமா பவ்” அதாவது “ரிஷாத் அமைச்சர் பாவம்….” இதனை எதற்காக கூறினாரோ தெரியாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -