காரைதீவு இராமகிருஷ்னன் வித்தியாலயத்தில் கல்முனைக் கல்வி வலய பாடசாலைகளுக்கான தைப்பொங்கல் விழா.

ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

ல்முனைக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கான தைப்பொங்கல் விழா இன்று (19) காரைதீவு இராமகிருஷ்ன மிஷன் பெண்கள் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் இடம் பெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் பரதன் கந்தசாமி, கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஐ.எம்.றகீம், எம்.எஸ்.எஸ்.ஏ.உமர் மௌலானா, சமாதானக் கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.றசீன் உள்ளிட்ட கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய வழிகாட்டிகள், மாணவர்கள் எனப் பெருந்தொகையானோர் பங்குபற்றினர்.

மும்மதப் பெரியார்களின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இவ்விழாவில் தைப்பொங்கல் விசேட பூசையும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்கள மாணவர்களது கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதேவேளை இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தையும், அகில இலங்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்ற மாணவன் கைலாயநாயன் நிலுக்ஷனும், அவரது பெற்றோர்களும் வரவழைக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டனர்.

கல்முனை வலயத்தில் மூன்று மதத்தவரிடையேயும் சாந்தி, சமாதானம், நல்லுறவு போன்றவற்றைப் பேணி, அதனை வளர்த்துவரும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் அவர்கள் மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்களால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.

மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'கல்முனைப் பிரதேசத்தில் தமிழ்,முஸ்லிம், சிங்கள உறவு பேணப்பட்டு, அது கட்டியெழுப்பப்பட வேண்டும். மூவின மக்களும் ஒற்றுமையாக, சந்தோசமாக வாழவேண்டும். அதற்காக நாம் அனைவரும் பாடுபட வேண்டும்' எனக் கெட்டுக் கொண்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -