யாழ்லில் ஆசிரியையால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்..!

பாறுக் ஷிஹான்-
சிரியையால் தாக்கப்பட்ட தரம் 6 மாணவி சுவாசச் சிரமத்திற்குள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.கோண்டாவில் இந்துக் கல்லூரியில் தரம் 6 இல் கல்விபயிலும் மேற்படி மாணவியே (இவர் மூன்று நாட்களிற்கு முன்னரே கல்லூரியில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளார்) நேற்று வியாழக்கிழமை ஆசிரியை ஒருவரினால் தாக்கப்பட்டவராவார்.

இவ்விடயம்தொடர்பாக வடக்கு மாகாணசபை எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்து அமைச்சர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள உடனடியாக விசாரணைக்குக் குழு அமைத்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியை வடமாகாண எதிர்க்கட்தித்தலைவர் எஸ்.தவராசா வைத்தியசாலை சென்று நேரிற் பார்வையிட்டு இச்சம்பவம் தொடர்பாக விசாரித்துமுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாகப் மாணவியின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -