றிப்கான் பதியுதீனால் தளபாடங்கள் வழங்கிவைப்பு

டமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது 

அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி 
போன்றன வழங்கப்பட்டது 

இதன்போது கருத்து தெரிவித்த றிப்கான் பதியுதீன்;

 " ஆரம்பக்கல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் அத்திவாரம் போன்றது. இங்கு கிடைக்கும் கல்வி மற்றும் ஒழுக்கம்தான் இவர்களுடைய எதிர்காலத்தினை தீர்மானிக்கின்றது அதேபோன்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் சாதாரணமான ஒருவர் அல்ல பல சிறந்த தலைமுறைகளை உருவாக்கும் ஒரு சக்தியாக இருக்கின்றார்கள் உதாரணமாக நான் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும்போது எனக்கு படிப்பித்த ஆசிரியை இன்றும் அதே ஆரம்ப பள்ளி பாடசாலை ஆசிரியராக இருக்கின்றார் ஆனால் அவரிடம் படித்த நான் இன்று ஒரு மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றேன் இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் நான் இன்று கெளரவமாக இருக்க காரணம் எனக்கு கிடைத்த சிறந்த ஆசிரியர்தான் அதேபோல இங்கு கடமையாற்றும் நீங்கள் இந்த மாணவர்களை பொறுப்பாக வழிநடத்தவேண்டும் சிறந்த தலைமைத்துவத்தினை கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் அதுமட்டுமல்லாது எனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பெரும்பான்மையான நிதி ஒதுக்கீடுகளை கல்விக்காக செலவு செய்கிறேன் அதேபோன்று இந்த பாடசாலைக்கு இருக்கும் தேவைகளை என்னால் இயன்றளவு மேலும் செய்வேன்" என தனதுரையில் தெரிவித்தார்​


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -