அஸ்ஸலாமு அலைக்கும்...!
அநாமேதய புத்தகம் ஓன்று எனது கைவசம் கிடைத்தது.அதனைத் தாங்களே எழுதி இருக்க வேண்டும் எனும் எனது ஊகத்தின் அடிப்படையில் உங்களுக்கு இந்த மடலை வரைகிறேன்.
தங்களின் தேக ஆரோக்கியத்துக்கும் மன அமைதிக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
பிழையான நேரத்தில் சரியான முடிவுகளும் பிழையாகும் என்பதற்கு உங்களின் புத்தகம் நல்ல உதாரணம்.திருட்டில் பங்கு கிடைக்காத திருடனின் வாக்கு மூலமாகவே இதனை நான் பார்க்கின்றேன்.
உங்கள் புத்தகத்தில் தரப்பட்டுள்ள தரவுகள் உண்மையாக இருக்குமோ என நினைத்து இப்போதும் என் மனது மிகுந்த வேதனைப் படுகின்றது.
கிழக்குமாகாண முதலமைச்சருக்கு இது சம்பந்தமாக விரைவில் கடிதம் ஒன்றை எழுதும் அவாவில் உள்ளேன்.அல்லது அவரது முகத்தில் இது சம்பந்தமாக கேட்பதற்கு இருக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் சமூக இயக்கத்தை விரைவில் தூய்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தலைவர் எடுப்பார் என நான் பெரிதும் நம்புகின்றேன்.இது சம்பந்தமாக அவருடனும் பேசுவதற்கு இருக்கின்றேன்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றிருந்தால் அதை இவ்வளவு காலம் கடந்து சொல்வதற்கான தேவை பற்றி நாங்கள் யோசிக்கின்ற பொழுது உங்களுக்கும் நீங்கள் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்ட நபர்களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.மாறாக நீங்கள் ஒரு பச்சைச் சுயநலவாதி என்றும் ஆபத்தான அதிகார வெறி கொண்ட மிருகம் என்றும் நிரூபித்து இருக்கிறேர்கள்.
குறிப்பிட்ட புத்தகத்தில் நீங்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்பதை எனது மனம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.நத்தை உறக்கத்திலிருந்து திடீரென விழித்து 16 வருடங்களின் பின்னர் முன்னர் எப்போதும் பேசி இராத வார்த்தைகளை நீங்கள் பேசுவதன் காரணத்தை அறிய பெரிதும் ஆவலாயுள்ளேன்.
சந்தர்ப்பவசத்தால் கட்சிக்குள் வந்து மாமனிதரின் மரணத்தின் பின்னர் கட்சியின் கொள்கைகளை அடியோடு மறந்த அற்ப போராளியாக உங்களைக் கண்டிருக்கின்றேன்.
ஒவ்வொரு தேர்தலிலும் இப்போது இருக்கும் தலைவரைப் பிழையாக வழிநடாத்தியதில் உங்களது பங்களிப்பு சகுனியை விட அதிகமானது.
கட்சியின் தேசிய பட்டியல் விவகாரத்தில் தலைமையைப் பயமுறுத்தி அதனைப் பெற்றுக்கொள்வதில் நீங்கள் நல்ல காரியவாதியாக இருந்திருக்கின்றிர்கள்.
நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் சத்தியமோஅசத்தியமோ நீங்கள் நிச்சயமாக ஒரு சமூகத் துரோகியே.
நீங்கள் குறிப்பிடும் குற்றச்சாட்டுக்கள் உண்மையானால் இவ்வளவு காலமும் பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும் இந்த விடயத்தை மறைத்து வைத்த நீங்கள் இதனைப் புரிந்தவர்களை விட மிக மோசமான அயோக்கியத்தனம் மிக்க ஒருவராக தோற்றமளிக்கின்றீகள்.
இந்த அயோக்கியத்தனத்தை வைத்துக் கொண்டா இவ்வளவு காலமும் மேடைகளில் முஸ்லீம் சமூகத்துக்காக முழங்கி வந்தீர்கள்...?
மாமனிதரின் மரணத்தின் பின்னர் கட்சி குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ எந்த அக்கறையும் எடுக்காத நீங்கள் இன்று சமூகம் குறித்துப் புலம்புவது ,அழுவது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா..?
வானத்தில் இருந்து விழுந்தாவது பாராளுமன்றம் செல்வேன் என்று கூறிய உங்கள் கூற்றுக்குப் பின்னால், இந்த குற்றச்சாட்டுக்களைக் கூறி தலைமையை அச்சுறுத்தலாம் அதன் மூலம் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகலாம் என்ற இந்த பூச்சாண்டிதான் இருந்ததா...?
மகிந்த அரசோடு இந்தக் கட்சியை கொண்டு சேர்த்து விட்டு கல்முனையில் கரையோர மாவட்டம் பெற்றுத் தருவதாக கூறிய நீங்கள் பின்கதவால் அமைச்சுப் பதவியைப் பெற்ற போது உங்களுக்குத் தெரியாத சமூகம் இப்போது தெரிவது ஆச்சரியமாக இருக்கின்றது.
பிறருடைய தூய்மைகளைப் பற்றி பேசுவதற்கு ஒருவனுக்குள்ள முதல் தகுதி அவன் தூய்மையாக இருப்பதுதான்.அது உங்களிடம் இருக்கின்றதா என்று கேட்டுப் பாருங்கள் .
ஹாபிஸ் நசீர் அவர்கள் தலைவரின் சொத்துக்களை அபகரித்ததாக அபகரித்த பொது தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் நீங்கள் அது உங்களுக்குத் தெரிய வந்த போது ஏன் போர்க்கொடி தூக்கவில்லை. இவ்வளவு சம்பவமும் நடப்பதை அறிந்த மகா வித்துவானான நீங்கள் ஒரு நாள் கூட இது சம்பந்தமாக வாய் திறக்கவில்லையே ஏன்..?
தலைவரின் மீதும் அவரது கொள்கைகளின் மீதும் விசுவாசமான நீங்கள் கட்சியின் வளர்ச்சியில் இதைக் கிழித்திருக்கின்றீர்கள்..?
தேசியப்பட்டியலுக்காக இந்தக் கட்சியின் தலைவரைப் பணயக் கைதியாக்கிய முதல் போராளி நீங்கள்தான்.உங்களை ஒரு பலவானாக நம்பிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உங்களது விடயத்திலும் ஹஸனலி அவர்களது விடயத்திலும் மாபெரிய தவறொன்ற்றைச் செய்துள்ளார் என்றே கருதுகின்றேன்.
நெருக்கடியான காலகட்டத்தில் கட்ச்சியினைப் பிளவு படுத்தும் சக்திகளாக நீங்கள் உருவெடுத்த போது கட்சியின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு உங்களைக் கவுரவப் படுத்தி உங்களுக்குத் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரைத் தந்து அழகு படுத்தியமைக்கு நீங்கள் கட்சிக்கும் தலைமைக்கும் தரும் கைம்மாறு நியாயம்தானா...?
இம்முறையும் உங்களுக்குத் தேசிய பட்டியல் தந்திருந்தால் இந்த மர்மக் குற்றச்சாட்டுக்கள் உங்களால் முன்வைக்கப்பட்டிருக்குமா என்று உங்கள் நெஞ்சத்தைத் தொட்டுக் கூறுங்கள் பார்க்கலாம்.
நீங்கள் முஸ்லீம் சமூகத்தின் முன்னால் நிறுத்தி வைத்துக் கொல்ல வேண்டிய கலாச்சாரக் குற்றவாளி என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உங்கள் அரசியலில் இருக்கின்றது.
பஷஹீர் சேகுதாவூத் என்கிற தனி மனிதனுக்கும் முஸ்லீம் தேசிய அரசியலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
ஆனால் உங்களுக்கும் முஸ்லீம் தேசியத்தின் சிதைவுக்கும் மிகப் பெரிய தொடர்புள்ளது என்பதை என்னால் நிரூபிக்க முடியும்.
உங்களுக்கு தைரியமிருந்தால் உங்களது நெஞ்சில் நேர்மை இருந்தால் முஸ்லீம் சமூக அரசியலுக்கும் உங்களது அரசியலுக்கும் தொடர்பு உள்ளது என்று நிரூபிக்க முடியுமாக இருந்தால் உங்களோடு பகிரங்க விவாதத்துக்கு நான் தயார்.
உங்களது பொருளாதாரத்தையும் உங்களது சுய லாபங்களையும் தக்க வைத்துக்கொள்ள நீங்கள் வகுத்த வியூகத்தின் தோல்வியில் இன்று மர்ம முடிச்சுக்களை அவிழ்த்து விட தொடங்கி இருக்கின்றீர்கள்.
நீங்கள் புத்தகம் எழுதுவதும் எழுதப்போவதாக அச்சுறுத்துவதும் புதிய விடயங்களல்ல.இன்னும் எழுதுவேன் என்று இன்னும் கூறுவீர்கள் என நினைக்கின்றேன்.
ஆறுகடக்கும் வரை அப்பப்பா ஆறு கடந்த பின்ன எப்பப்பா என்பது நமது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என நினைக்கின்றேன்.
தலைவரின் மரணம் குறித்தும் இப்போதைய தலைவரின் வாழ்வு குறித்தும் மீண்டும் சில மர்மக் கதைகளை கூறத்ததான் போகின்றீர்கள் என்பதையும் நான் உணர்கின்றேன்.
காட்சியைப் பிழையாக வழிநடாத்தியதற்கு மிகப் பெரும் சான்று கட்சிக்குள்ளிருக்கும் இன்னும் சில பாராளுமன்ற உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டு மஹிந்தவிடம் போய்ச் சேர ஆலோசனை கூறிய அந்த காவலித்தனத்தை இல்லையென்று மறுக்க முடியுமா...?
கரையோர மாவட்டம் காலம் கடந்து போன கதை என்று உயர்பீடக் கூட்டத்தில் கூறவில்லையா...?
அதே வாயால் கல்முனை கரையோர மாவட்டத்தை மகிந்த அரசில் இணைந்த மறுநாள் பெற்றுத் தருவேன் என்று கல்முனை ஸாஹிரா வித்தியாலயத்தில் கூறவில்லையா..?
உயர்பீடத்துக்கு தெரியாமல் கேபினெட் அமைச்சு பெறும் போது தலைவரின் கொள்கைகள் தெரியவில்லையா...?
அல்லது மறைந்த தலைவர் இந்த வழிமுறையை உங்களுக்கு மட்டும்தான் சொல்லித்தந்தாரா...?
மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்சியைப் பலப்படுத்தும் எந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தீர்கள்...?
உங்களது தலைமையில் எந்தத் தேர்தலிலாவது வென்றிருக்கின்றோமா...?
மகிந்தாவுக்குச் சாமரம் வீசிய சோணகிரியான நீங்கள் எங்களை பார்த்து சோணகிரிகளா என்று கேட்க என்ன தைரியம் உங்களுக்கு...?
ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் உணர்வுகளைக் கிண்டிப்பார்க்க மகிந்த அரசு திட்டம் தீட்டி செயற்பட்ட பொழுது உங்களை போன்ற கோடாரிக்காம்புகளுக்குப் பயந்துதான் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் நிதானிக்க வேண்டியிருந்தது.இது இந்தக் கட்ச்சிக்குப் புதிய விடயமல்ல.
காட்சியைப் பாதுகாக்கவும் அதனைத் தக்க வைத்துக்கொள்ளவும் இந்தத் தலைமை வகுத்த வியூகங்களில் பிழைகள் இருந்த போதும் அவரது நோக்கம் சரியாகவே இருந்திருக்கின்றது.அவரது பலவீனங்களை உங்களது பலங்களாக எடுத்துக் கொண்ட நீங்கள் இன்று கட்சியை அழிக்கும் இறுதி ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கின்றீர்கள்.
செட்டி எப்போது சாகுவான் சந்தையை எப்போது ஒப்புக் கொள்ளலாம் என்ற உங்களைப் போன்ற துரோகிகளால்தான் கட்சிக்கு இந்தப் பின்னடைவுகள் தொடர்ந்து வருகின்றது.
மைத்திரிபாலாவுக்கு வாக்களிக்காமல் சால்வைக்குள் கட்டுண்டிருந்த உங்களுக்கும் சமூக அரசியலுக்கும் என்ன சம்பந்தம்...?
தயவு செய்து ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தானாக விலகிக் கொள்ளுங்கள்.
இது இந்த சமூகத்துக்கும் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கும் நீங்கள் செய்கின்ற மிகப் பெரும் கைங்கர்யமாகும்.
அன்புடன்
எம்.ஐ. முஹம்மத் றணூஸ்
