சவால்மிக்க வருடத்தில் நல்லாட்சி அரசாங்கம்...

ஜெம்சித் (ஏ) றகுமான்-

கிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கலைக்கப்பட்டு, இண்டு பெரும்பான்மை கட்சிகள் ஒன்றினைந்து நாட்டை வழி நடாத்திக் கொண்டிருக்கும் தற்போதய காலகட்டத்தில் இந்த தேசிய அரசாங்கம் நீடிக்குமா?? என்ற கேள்வி நம் மத்தியிலே எழுந்துள்ளது.
இரண்டு பெரும்பான்மை கட்சிகள் ஒன்றினைந்து அமைத்திருக்கும் தேசிய அரசாங்கத்தில் சுதந்திர கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு அரசாங்கத்தில் கொண்டுள்ள அதிருப்தி,நல்லாட்சியை உருவாக்கி இனப்பிரச்சினைக்கான தீர்வினை அடைய முடியும் என பாரிய அளவிலான எதிர்பார்ப்பை கொண்டிருந்த சிறுபான்மை கட்சிகளின் அரசுக்கு எதிரான போர்க்கொடிகள்,புதிய
அரசியல் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் இவற்றை விட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேசிய அரசுக்கு எதிரான சவால் போன்றவற்றை காரணங்களாக குறிப்பிடலாம்.

தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கும் இரண்டு பெரும்பான்மை கட்சிகளுக்குள்ளும் அண்மைக்காலங்களில் கருத்து முறண்பாடுகள் ஏற்பட்டு இரு வெவ்வேறு திசைகளில் பயணம் செய்கின்றனர். இந்த நிலைமை தொடருமானல் மீண்டும் ஒரு தேர்தலை இலங்கை மக்கள் எதிர்பார்க்க முடியும்.
தேசிய அரசாங்கம் தங்களது போக்கை மாற்றாவிட்டால் மகிந்த ராஜபக்ஷவின் கனவை நனவாக்கியது போல் ஆகிவிடும்.நல்லாட்சியை கலைக்க வேண்டும் என அவர் கங்கணங் கட்டிக் கொண்டு திரிவதனை அண்மையில் அவர் கூறிய “எதிர்வரும் உள்ளுர் ஆட்சி தேர்தலில் சுதத்ந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு அவர்கள் பலவீனம் அடைகின்ற போது ஆட்சியை இலகுவாக கவிழ்க்க முடியும்” என்ற கருத்தின் மூலம் அறிய
முடிகிறது.
சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் அரசுக்கு தலையிடியை கொடுக்கும் வகையில் பல கருத்துக்களை வெளியிடுகின்றனர் .இக்கருத்துகள் மகிந்த ராஜபக்ஷவின் பொது எதிரணியை உற்சாக மூட்டி,தட்டி எழுப்பும் கருத்துகளாக இருக்கிறது.
அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்திருந்தார், மாகாணசபை உள்ளுராட்சி மன்றங்களின் இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜெயரட்ண இவரின் இந்த அதிரடி முடிவானது நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் முதல் கட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் அவதானிகள் கூறி இருந்தார்கள்.
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவிடம் ஒப்படைக்கும் அரசின் செயற்பாட்டிற்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு கொடிகளை ஏந்தி இருக்கிறார்கள்.சீனாவிடம் அவ்வாறு ஒப்படைக்க படுமானால் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக கூடிய வாய்ப்புகளும் உண்டு.

தேசிய அரசாங்கத்தின் தூண்கள் என கூறிவரும் சிறுபான்மைகட்சிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் தற்போதைய அரசாங்கத்தில் திருப்தியடையவில்லை என்பதை காட்டுகிறது.
வில்பத்து ஜீவராசி பிரகடனம், தொல்பொருள் ஆராய்ச்சி எனும் பெயரில் முஸ்லிம்களின் இறை இல்லங்கள்,காணிகளை சூரையாடல்,முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களில் பெளத்த சிலைகள்,விகாரைகள் அமைத்தல் போன்ற செயற்பாடுகளினால் சிறு பான்மை முஸ்லிம் கட்சிகள் தேசிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்திருக்கின்றன.இந்த நிலை தொடருமாயின் முஸ்லிம்,சிங்கள மக்களிடயே இன முறுகலை
ஏற்படுத்திவிடும்.

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு நல்லாட்சி மூலமாவது விடிவை பெறலாம் என நினைத்து கொண்டிருந்த தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருக்கிறது.புதிய அரசியல் யாப்பில் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை எனவும்,ஒற்றையாட்சி யாப்பாக அமையும் என்பதோடு சமஷ்டி முறையை ஒத்ததாக அமையாது எனவும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின்
மஹாநாயக்க தேரர்களை சந்தித்த வேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறி இருந்தார்.இக் கருத்தின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்த நல்லாட்சி மீதான இறுதி நம்பிக்கையும் இல்லாமல் போய் இருக்கிறது.சர்வதேச விசாரணை விவகாரத்தில் த.தே.கூ பிற்கும் நல்லாட்சி அரசாங்கத்திற்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

எனவே இவற்றை ஒட்டு மொத்தமாக ஆராய்கின்ற போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு இந்த வருடம் சவால்மிக்கதாக இருக்கும்.அத்தோடு தேசிய அரசாங்கத்தின் இரண்டு கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்(2017.01.08) உடன் முடிவடையும் தறுவாயில் உள்ளது.தேசிய அரசாங்கம் தொடருமா??அல்லது முடிவுறுமா??என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -