நிந்தவூர் அனல் மின் நிலையப் பிரச்சினைக்கு உயர் மட்டத்தில் தீர்வு.!

சுலைமான் றாபி- 
நிந்தவூரில் அமைந்துள்ள அனல் மின் நிலைய பிரச்சினைக்கு விரைவில் உயர் மட்ட மூலமாக தீர்வு கிடைக்குமென சுகாதாரப்பிரதியமைச்சர் பைசால் காசிம் இன்றைய தினம் (14) நிந்தவூர் அட்டப்பள்ள பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளின் பேரில் அங்கு சென்று மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் : 

இம்மின் நிலயத்தினூடாக ஏற்படும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்க்கமான முடிவொன்றிற்கு வரவேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இதுவரைகாலமும் இம்மின் நிலையம் சார்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் சுகாதார பிரதியமைச்சர் என்ற வகையில் தான் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லையெனவும், அதன் மூலம் இம்மக்களின் கோரிக்கைகள் தன்னால் புறந்தள்ளப்பட்டுள்ளதாகவும் இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

ஆனால் இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்க உயர் அதிகாரிகளுடனும், இம்மின் நிலைய உரிமையாளருடனும் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளேன். எனவே இவ்விடயம் சம்பந்தமாக எதிர்காலத்தில் ஒரு ஆரோக்கியமான முடிவொன்று கிடைக்கவுள்ளது. 

அதேபோன்று இம்மின் நிலையத்தின் மூலமாக ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்கு இப்பகுதி மக்களில் 05 பேர் கொண்ட குழுவினையமைத்து அவர்கள் மூலமாக இதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ளுமாறு பிரதியமைச்சர் வேண்டியதையடுத்து அதற்காக இப்பகுதி மக்களினால் ஒப்புதல் வழங்கப்பட்டு விரைவில் அரச உயர் அதிகாரிகளை சந்திப்பதற்காக வசதி வாய்ப்புக்களும் பிரதியமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -