பன்மைத்துவ கலாச்சார ஒன்றிணைவு விழா..!

ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் மத ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஒன்றிணைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (31.01.2017) தமிழ், சிங்கள. முஸ்லிம் மாணவர்களைக் கொண்டு சிறப்பாக இடம்பெற்றதாக ஏறாவூர்ப் பற்று 1 கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம். பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏறாவூர்ப் பற்று கோட்டம் 1 கல்வி சமூகத்துடன் இணைந்து மட்டக்களப்பு மத்தி முஸ்லிம் கல்வி வலயம் மற்றும் மஹாஓயா சிங்கள கல்விச் சமூகம் என்பன இணைந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மாணவர்களைக் கொண்டு இந்த கலாச்சார ஒருங்கிணைவுப் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது பல்லின, பன்மைத்துவ கலாச்சார அம்சங்களைக் கொண்ட நிகழ்வுகள் தமிழ், சிங்கள. முஸ்லிம் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -