எல்லைக் கிராமங்களுக்கு அடியாட்களுடன் சென்று அச்சுறுத்துவதை வியாழேந்திரன் எம்பி நிறுத்திக் கொள்ள வேண்டும்-சுபைர் காட்டம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மிழ் முஸ்லிம் மக்கள் பரஸ்பர நட்புறவுடன் உதவி ஒத்தாசை புரிந்து கொண்டு வாழும் எல்லைக் கிராமங்களுக்குச் சென்று முஸ்லிம் மக்களை அச்சுறுத்துவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தொடர்;ச்சியாக மேற்கொண்டு வருகின்றார். இத்தகைய அநாகரிகமான செயற்பாட்டினை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார்.

ஏறாவூர் தாமரைக்கேணி அல் அக்ஷா எல்லைக் கிராமத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தொழுமிடமான கொட்டில், மற்றும் அங்குள்ள முஸ்லிம்களின் காணிகளிலிருந்த வேலிகள் என்பன சேதப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் வியாழக்கிழமை ஊடகளுக்குக் கருத்துத் தெரிவித்த சுபைர், மேலும் கூறியதாவது,

நான் கொழும்பில் இருக்கின்ற போது ஏறாவூரிலிருந்து தாமரைக்கேணி கிராம மக்களும் மற்றும் சமூகநலன் விரும்பிகளும் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தாமரைக்கேணி அல் அக்ஷா எல்லைக் கிராமத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வன்முறைச் சம்பவம் பற்றி விளக்கினர்.
யுத்தம் இடம்பெற்ற போது உயிரச்சுறுத்தலில் வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமது பூர்வீக வாழ்விடங்களுக்குக் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்தகையதொரு பகுதியே தாமரைக்கேணி அல் அக்ஷா எல்லைக் கிராமமாகும். அது ஆங்கிலேயர் காலத்திருந்தே முஸ்லிம்களுக்கு உரித்தான பூர்வீக இடமாக இருந்து வந்துள்ளது.

எனினும், யுத்தத்தின் காரணமாக முஸ்லிம்கள் 30 வருடங்களாக தமது வாழ்விடங்களை விட்டு ஒதுங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
இப்பொழுது அந்தப் பகுதியில் முஸ்லிம் மக்கள் தமது பூர்வீகக் காணிகளில் வாழ்வதற்கு மனமுவந்து தமிழ் மக்களுக்கும் இடமளித்திருக்கின்றார்கள்.
ஆனால், இவை எதையுமே அறிந்தராத நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் யாரோ விஷமிகளின் கதையைக் கேட்டு விட்டு தடாலடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்று முஸ்லிம் மக்களின் காணிகளிலுள்ள வேலிகளைப் பிடுங்கி எறிந்து சேதப்படுத்தி விட்டிருப்பதாகவும் அங்குள்ள தற்காலிகமாக தொழும் ஏற்பாட்டுக்காக அமைக்கப்பட்ட இடத்தை எரித்துள்ளதோடு, அந்த இடத்தின் வேலிகளையும் அவரது அடியாட்கள் மூலம் சேதப்படுத்தியதாக அறிகின்றேன்.

இன நல்லுறவுக்காக அனைவரும் பாடுபட்டுக் கொண்டு வரும் இவ்வேளையில் இது ஒரு அச்சுறுத்தல் என்றே கருத வேண்டியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறாக எல்லைக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள தமிழ் முஸ்லிம் இன உறவைச் சீர்குலைக்கும் விதமாக தொடர்ச்சியாக ஈடுபடுவதோடு கருத்துக்களையும் தெரிவித்து வருவது ஆரோக்கியமானதல்ல.

உண்மையில் காணி சம்பந்தப்பட்ட பிணக்குகள் இருக்குமாயின் அதனைக் கையாள்வதற்கு நடைமுறைகள் இருக்கின்றன.
சிவில் நிருவாகம், பிரதேச செயலகம், பொலிஸ், நீதிமன்றம் என்றாவாறான நடைமுறைகளை விட்டு விட்டு அடாவடித் தனத்தில் இறங்குவதற்கு மக்களைத் தூண்டும் விதமாக நடந்து கொள்வது அருவருக்கத்தக்கது.
இத்தகைய அச்சுறுத்தல் எதிர்காலத்திலும் இடம்பெறுமாக இருந்தால் மக்களைக் குழப்பும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனின் அடாவடித் தனங்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் பின் நிற்க மாட்டார்கள்.' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -