கல்குடா : தந்தையை இழந்த மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு

எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் சவுதியைச் சேர்ந்த சகோதரி உம்மு உதுமான் அவர்களின் பங்களிப்புடன் வழங்கப்பட்டு வரும் இத்திட்ட்டத்தின் 2017ம் ஆண்டிற்கான முதல் கட்ட நிதி வழங்கும் வைபவம் இன்று 24ம் திகதி செவ்வாய்க்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் 47 மாணவ மாணவிகள் நிதியினை பெற்றுக் கொண்டனர். ஒருவருக்கு பன்னிரெண்டாயிரம் ரூபாய் நிதி வழங்கிவைக்கப் பட்டது.

நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் வாழைச்சேனை கோறளைப் பற்று மத்தி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் ஸஹ்வி, உப தலைவர் ரீ.எல் அமானுல்லாஹ் சர்ஹீ, மற்றும் மௌலவி ஏ.எல்.பதுர்தீன் ஸஹ்வி மௌலவி அப்துர் ரஹ்மான் அஸ்ஹரி, ஸாஜஹான் நஹ்ஜி உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -